விடிந்தது.
காலைப் பொழுது ரம்மியமாக இருந்தது மதுமதிக்கு, சுபத்ராவோ அடுப்படியில் வேலை செய்வது அவளுக்கு கேட்டது.
”ஓ அம்மா எழுந்துட்டாங்க போல இருக்கே நாமளும் சீக்கிரமா குளிச்சி ரெடியாயிடனும் இல்லைன்னா அப்பா திட்டுவாரு” என நினைத்தவள் அவசரமாக கட்டிலை விட்டு எழுந்து நின்றாள் சுற்றி முற்றி பார்த்தாள், கதிரவன் அறை என்றதுமே உள்ளுக்குள் குறுகுறுவென இருந்தது, தான் ஒரு ஆண்மகனின் அறையில் ஒரு நாள் இரவு முழுவதும் தனிமையாக படுத்து உறங்கியிருப்பதை நினைத்து ஆச்சர்ய்பட்டாள்.
கூடவே அவளுக்கு என்றும் இல்லாத உற்சாகமும் பிறந்தது, அதனால் குதூகலமாக அந்த அறையை விட்டு வெளியேறியவள் மறக்காமல் அந்த அறைக்கதவை சாத்தி தாள்பாள் போட்டுவிட்டு தன் அறைக்குச் சென்றாள், அங்கிருந்து மாற்றுத்துணியை எடுத்துக் கொண்டு நேராக அடுப்படிக்கு சென்றாள், அதற்குள் சுபத்ரா காலை டிபனே செய்துக் கொண்டிருக்க அதைக்கண்டு வியந்தாள் மதுமதி
”என்னம்மா இப்பவே டிபன் செய்ய ஆரம்பிச்சிட்ட”
“ஆமாம் மணி 9 ஆகுதுல்ல”
”என்னது மணி ஒன்பதா அடடா ஏம்மா என்னை எழுப்பலை”
”உன் ரூமுக்கு வந்து பார்த்தேன், நீ அங்க இல்ல சரி நீ எழுந்திருச்சிருப்பன்னு நினைச்சி விட்டேன் ஆமா நீ உன் ரூம்ல இல்லாம எங்க போயிருந்த”
”ஓ அதுவா அது” என அவள் இழுக்க சுபத்ராவோ
”சரி சரி எல்லாம் பொறுமையா பேசலாம், உன் அப்பா வந்துடுவாரு உன்னை இப்படிப் பார்த்தா திட்டுவாரு போ போய் குளிச்சிட்டு வாம்மா”
”சரிம்மா” என சொல்லி நைஸாக அவ்விடம் விட்டு விலகி கொல்லைப்புறம் சென்றாள்.
அங்கே குளித்து முடித்து மாற்றுத்துணி உடுத்திக்கொண்டு வெளியே வந்தவள் அதிர்ந்தாள். காரணம் அங்கு பழக்கத்தின் காரணமாக கதிரவனின் மாடுகள் காலை நேரத்தில் கதிரவன் அங்கு பண்ணை வீட்டில் அவைகளை விடுவிக்கவும் தானாக வீடு தேடி வந்து மாட்டுக்கொட்டைகைக்குள் தங்கிவிட்டன.
”இந்த மாடுங்க எப்ப வந்துச்சி” என நினைத்தபடியே அதனிடம் செல்ல அந்த மாடுகளோ புதிதாக இருந்த மதுமதியை ஏற்றுக் கொள்ளாமல் சீறியது. முரட்டு காளை மாடுகள் சீறுவதைக்கண்டு பயந்தாள் மதுமதி அந்நேரம் ராகவன் வந்து அவளை காப்பாற்றினான்
”ஏய் காளை மாரி அமைதியாயிருங்க, இவள் யாரோ இல்லை என் தங்கச்சி புரியுதா சீறாத