“யார் நீங்க?” பூர்வியை விழிகள் சுருக்கி சந்தேகமாக பார்த்தார் அந்த பெண்மணி.
“நான் பூர்வி. நானும் அகதாவும் சில வருஷங்களுக்கு முன் ஒன்னா வேலை செய்தோம்.”
திவேஷ் நிறுவனம் தொடங்கிய முதல் சில வருடங்கள் அங்கே வேலை செய்தவர்கள் அனைவரையும் பூர்விக்கு தெரியும். குறிப்பாக அகதா உடன் பூர்விக்கு நல்ல பழக்கம் இருந்தது. குழந்தைகள், குடும்பம் என்று பூர்வியின் வாழ்வு பரபரப்பாக மாறி விட்டப் பிறகு நிறுவனம் பற்றி பூர்வி அதிகம் யோசிக்க வேண்டி இருக்கவில்லை. இப்போது அவளுக்கு விபரம் தேவைப்பட்டதால் அகதாவின் விலாசத்தை தேடிக் கண்டுப்பிடித்து வந்திருந்தாள்.
“எங்கே வேலை செய்தீங்க?” பெரியவர் இப்போதும் சந்தேகமாக ஆங்கிலத்தில் கேட்டார்.
பூர்வி அவர்கள் நிறுவனத்தின் பெயரை சொன்னாள்.
பெரியவரின் முகம் கருத்தது.
“இப்போ நீ அங்கே வேலை செய்யலையா?”
“இல்லை நான் வேலையை தொடர முடியலை. குடும்பத்தை பார்த்துக்க வேண்டி இருந்தது”
பெரியவர் யோசிப்பது போல அமைதியாக இருந்தார். பிறகு முடிவெடுத்து பூர்வியை உள்ளே வர அனுமதித்தார். வீடு அமைதியாக இருந்தது.
“அகதா வேலைக்கு போயிருக்காளா? அவ போன் நம்பர் இருந்தா தர முடியுமா?”
“நீ கடைசியா அகதாவை எப்போ பார்த்த?”
“எட்டு ஒன்பது வருஷம் இருக்கும். அகதா எப்போ வருவா?”
“அவ வர மாட்டா”
“ஏன்? வேற ஊருக்கு போயிட்டாளா? அவ போன் நம்பர் தர முடியுமா?”
“கொடுத்தாலும் பயனில்லை”
பூர்விக்கு பெரியவளின் பேச்சு புதிராக இருந்தது. அவளுக்கு நேரம் அதிகமில்லை. பிள்ளைகள் பள்ளியில் இருந்து வரும் முன் வீடு திரும்ப வேண்டும். செய்வதற்கு வேறு பல காரியங்கள் இருக்கின்றன.
“நான் அகதா கிட்ட பேசனும்”
“அது நடக்காது”
“எதுக்கு அப்படி சொல்றீங்க?”
“அகதா இறந்துப் போயிட்டா. ஆறு வருஷம் மேல ஆச்சு”
காதில் விழுந்ததை நம்ப பூர்விக்கு கடினமாக இருந்தது. இளமை துடிப்புடன் எதிர்காலத்தை பற்றி ஆயிரம் கனவுகளுடன் இருந்த அகதா இறந்து விட்டாளா?
“என்ன ஆச்சு? எப்படி நடந்தது?”
Poorvi needs to escape from him with the kids and her money