(Reading time: 8 - 16 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

காதலை அவ கண்டிப்பா ஏத்துப்பான்னு எனக்கு நிறையாவே  நம்பிக்கை இருக்கு! என்ற தினேஷின் தோளில் ஆறுதலாகத் தட்டினான் கார்த்திக். திட்டமிட்டபடியே மூவரும் படத்துக்கு சென்றுவிட அன்றைய பொழுதின் கவலைகள் மறந்து போனது.

சத்யா ரம்யாவிடம் பேச வந்தாள். ராபின் தலையிட்டு தன்னைத் தடை செய்தததை சொன்னாள் ரம்யா. “இதுக்கே பயந்துட்டா எப்படி ரம்மி? இன்னும் எவ்வளவு பிரச்சினை வரும்! அவன் வேண்டாம்னு சொன்னா தினேஷை நீயும் வேண்டாம்னு சொல்லிருவியா? தினேஷ் வேணாம்னு விட்டுட உன்னால முடியுமா?” என்று கேட்கவும், “நிச்சயமா தினேஷை என்னால விட முடியாது!” என ரம்யா சொல்லவும்,சரிடி! கொஞ்சம் பொறுமையா இரு! தினேஷ்  ராபின் கூட இல்லாத நேரம் எதுன்னு அவன் பிரெண்ட் கார்த்திக் மூலம் கண்டுபிடி. கண்மணிகிட்ட கேட்டால் தெரியும்னு நினைக்கிறேன். அப்படிப்பட்ட எதாச்சும் ஒரு நேரத்துல தினேஷ் தனியா இருக்கும்போது போய் சொல்லு என்று யோசனை சொல்லியவள், கொஞ்சம் நேரம் பிற விஷயங்கள் பேசிவிட்டு, சத்யா வீட்டுக்குக் கிளம்பினாள். ஒரு மாதமும் ஒரு வாரமும் மின்னல் வேகத்தில் ஓடியது. ரம்யாவின் காதல் அவள் சொல்லாமலே தினேஷுக்குப் புரிந்துவிட்டது.

மார்ச்  23rd 2003,

ரம்யா கல்லூரியில் இருந்து அப்போது தான் வீட்டில் நுழைந்து சற்று நேரம் ஆகியிருந்தது. அம்மா சித்தியுடன் டெய்லர் வீடு வரை போய்வருகிறேன் என்று கிளம்பினார்கள். வீட்டில் பாட்டியும், அவளும் மட்டுமே. பாட்டி வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு  அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்மணிகளுடன் பேசச் சென்றுவிட்டார். மணி நாலரை எனக் கடிகாரம் காட்ட, ஒவ்வொரு நாளும் செல்வது மலையை நகர்த்துவது போல் இருக்கிறது என்று நினைத்தவளின் சிந்தனையைக் கலைக்கும் விதமாகத் தொலைபேசி அழைப்பு அவளை இழுத்தது.

ரிசீவரைக் கையில் எடுத்ததும் தெரிந்து விட்டது தினேஷ் தான் என்று,

“சொல்லு ரம்யா! சொல்லு! நீயும் என்னை விரும்புற தானே! அன்னிக்கு எங்கிட்ட நோன்னு சொல்லிட்டுப் போன! ஆனால் இப்போ எஸ் தானே, சொல்லு எஸ் தானே!” என்றான்.

“ம்!” என்றாள் வார்த்தை எதுவும் சொல்லாமலே.

“எஸ்!எஸ்!எஸ்! மறுமுனையில் அவன் குதிப்பது அவளுக்கு மனக்காட்சியிலேயே தெரிந்தது.

நிச்சயமா நாம விரும்புறது  நடக்குமா? என்றாள் ரம்யா

ஆமாம் அது நடக்கும், கண்டிப்பா நடக்கும். இந்த உலகம் முழுசும் ஒன்னுகூடி என்னை எதிர்த்தாலும், நீ தான்  என் பொண்டாட்டி., அவன் பாட “ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று! என பாட  ஆரம்பித்தான்.

தினேஷ் தொலைபேசியைப் ஒரு கையில்  பிடித்துக் கொண்டு அதீத மகிழ்ச்சியில் 

4 comments

  • :dance: Finally green signal vandhachi ini yavdhu arrears ellam vaikamal padinga pa padinga :yes: Ramya kk irundhalum thairiyam than but how long will this continue :Q: interesting update ma'am 👏👏👏👏👏 ini story eppadi pogumnu parka waiting.<br />Thank you.
  • :Q: thevi moolama edhavathu pirachinai varuma? :clap: nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.