(Reading time: 9 - 17 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

ஸ்வீனாவின் கட்டாயத்தில் அறைக்குள் நுழைந்தவள் என்ன சொல்லி காயப்படுத்த போகிறானோ என்று கேள்வியோடு அவன் முகம் பார்க்க பெண்ணவளின் மனதை கொள்ளை கொண்டவனோ கனவுலகில் சஞ்சரிக்க அவனை பார்வையாளே அள்ளி பெருகிக்கொண்டு இருந்தாள்.

அந்நேரத்தில் அவன் பேரழகி தான் என்று சொல்ல அப்போது தான் பெண்ணவளுக்கு உறைத்தது அவன் இன்னும் தன்னை பார்க்கவில்லை என்று.. அப்படி என்றால் அந்த பேரழகி அந்த ஸ்வேதாவாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு மனது வலித்தது. எது எப்படியோ இனி என்ன நடந்தாலும் வாழ்க்கை இந்த வீட்டில் தான் என்று எண்ணியவள் அவனை சீண்டிப் பார்க்கும் விதமாக ஹலோ.. என்று அவன் முன்னால் சொடக்கு போட்டவள் உட்கார்ந்து கொண்டே தூக்கமா என்றாள்...

திடீரென அருகில் கேட்ட சத்தத்தில் விழித்தவன் ஒரு நொடி தன்னை மறந்து அவளை ரசித்தான். இளம்பச்சை நிற தங்க சரிகை வைக்கப்பட்ட புடவையில் வளைவு நெளிவு தெரிய ஆனாலும் உடல் முழுவதும் மூடி இருக்க அவனுக்கு ரம்பை ஊர்வசியை நினைவுப்படுத்தினாள் அவள். 

அவன் பார்வை அவனை ரசிப்பதை உணர்ந்தவளுக்கு சிறிதே சிறிதாய் வெட்கம் தொற்றி கொள்ள அதைப் பார்த்தவனுக்கு அப்போது தான் உரைத்தது அவளை ரசித்து பார்த்தது.

நொடி பொழுது கூட தன் முகத்தை மாற்ற நேரம் எடுத்து கொள்ளாமல் முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் தூங்குவேன்... அது என் விருப்பம் என்றான் சற்று திமிராக...

அதை எதிர்பார்த்தவள் போல அலட்டிக் கொள்ளாமல் அவனது லேப்டாப்பை தள்ளி வைத்து விட்டு மெத்தையில் அமர்ந்தாள்.

ஏய்... என்ன செய்ற... இது நான் படுக்க... நீ தொட கூட கூடாது... ஸ்வீனாவிற்காக தான் இந்த அறைக்குள் உன்னை விட்டேன். இந்தா பெட்ஷீட் என்று தூக்கி எறிந்தவன் கீழே படு என்றான்.

கீழேயா... பிறந்ததில் இருந்து கீழே படுத்து பழகவில்லை. இப்போதும் அது நடக்காது... நிறைய தமிழ் படம் பார்த்து கெட்டு போயிருப்பீங்க போலயே என்றவள் அவன் அருகில் படுத்து பெட்ஷீட்டால் மூடிக் கொண்டாள்.

ஜனாவோ பதில் பேச முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டே அமர்ந்து விட்டான். நான் நினைத்தது போல இவளை அடக்குவது சுலபம் இல்லை போலயே.. இவளை என்ன செய்யலாம் என்று யோசித்தவன் அந்த வழியை நாளைக்கு தேடலாம்... இப்போது எங்கே தூங்குவது... எப்படி தூங்குவது என்று வழியை கண்டுபிடிப்போம் என்று யோசனையுடன்

22 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.