தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 08 - சசிரேகா
லஷ்மி ஹரிஹரன் தந்த முத்தத்தை நினைத்து வெட்கப்பட்டாள். அவளது இந்த வெட்கத்தை கண்டு தீப்தி, ஹரி, வரதன் 3 பேருமே குழம்பினார்கள்.
தீப்தியோ
”என்ன இவள் இப்படி வெட்கப்படறா? அப்படின்னா ஹரியை விரும்பறாளா எப்படி வாய்ப்பேயில்லையே அப்படி அவன் என்ன செஞ்சான் இவளை” என அவள் சந்தேகிக்க
வரதனோ
”லஷ்மி எதுக்கு வெட்கப்படறாள்ன்னு தெரியலையே அதுவும் ஹரிக்காக வெட்கப்படறாளா இல்லை கல்யாணத்தை நினைச்சி வெட்கப்படறாளா”
ஹரியோ
”லஷ்மி எனக்கு புரியுது, 3 பேர் திடீர்ன்னு இப்படி உன் ... ்கனவே அந்தாளு என்னை நம்பாம என்னை விரட்டறதிலயே இருக்காரு, நானா லஷ்மிகிட்ட எதையாவது பேசி அதுக்கு அவள் அவளோட அப்பாகிட்ட போட்டுக் கொடுத்துடுவா சொந்த காசுல சூனியம் வைச்சிக்க நான் தயாராயில்லை
This story is now available on Chillzee KiMo.
...