(Reading time: 9 - 18 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

இசைத்துக் சென்ற இருகூர் மாமன் மகள்!

இப்படியாய்

என்னுள் பாதித்தவர்கள் ஏராளமாயிருக்க

என்னுள் சாதித்தவள் நீயொருத்தி மட்டுமே!

                            (ஜோதீஸ்வர்)

வாட்ஸ்அப்பில் கவிதையை அனுப்பி விட்டு கோகிலாவின் அழைப்புக்காகக் காத்திருந்தான்.

அவனை நீண்ட நேரம் காக்க வைக்க விரும்பாமல் உடனே வந்தது அழைப்பு.  “கலக்கறீங்க சார்” என்றாள் கோகிலா எடுத்த எடுப்பில்.

“உங்களை விடவா?”

“க்கும்...நானெல்லாம் கத்துக்குட்டி!...நீங்கெல்லாம் கான்கிரீட் கட்டி!...”

“வாவ்...இதுவே கவிதை மாதிரி இருக்கே?” என்று ரவீந்தர் சொல்ல,

“கல...கல”வென்று சிரித்த கோகிலா., “ஓ.கே.சார்...ஆபீஸ்ல சந்திப்போம்!..இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமே போகணும்” என்றாள்.

“ஏன்?...என்ன விசேஷம்?...எம்.டி.வர்றாரா?” கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டான்.

“புதுசா ஒரு லேடி ஸ்டாப் நம்ம பிராஞ்ச்சுக்கு டிரான்ஸ்பர் ஆகி வர்றாங்க” என்றாள் கோகிலா கண்ணடித்தபடி.

“ஓ...எந்த பிராஞ்ச்ல இருந்து வர்றாங்க?” ஆர்வமாய்க் கேட்டான்.

“ரொம்ப ஜொள்ளு விடாதீங்க சார்!....கோயமுத்தூர் பிராஞ்சுதான்!...உங்களுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கலாம்”

“கோயமுத்தூர் பிராஞ்ச்ன்னா நிச்சயம் தெரியும்...பேர் என்ன?”

“காவ்யா”

“கா...வ்....யா?...”என்று யோசித்தவன், “அட ஆமாம்!...அந்தப் பொண்ணுதான் எனக்கு இந்த பொள்ளாச்சி பிராஞ்ச்சோட அட்ரஸும்...மற்ற டீட்டெய்ல்ஸும் குடுத்திச்சு!...அடக் கஷ்ட காலமே...அதையேன் டிரான்ஸ்பர் பண்ணினாங்க?ன்னு தெரியலையே?” என்று சொல்ல,

“ஹலோ...அவங்க வாலண்டரியா இந்த பிராஞ்ச் வேணும்!னு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வர்றாங்க” என்றாள் கோகிலா.

“அப்படியா?...ஏன்?...என்னாச்சு அந்தப் பொண்ணுக்கு?...கோயமுத்தூர் பிராஞ்ச் ஃபர்ஸ்ட் கிளாஸா இருக்குமே?...அதை விட்டுட்டு இங்க ஏன் வருது?...அப்படி என்ன இருக்கு இங்கே?” குழப்பமாய்க் கேட்டான்.

“ஒருவேளை...உங்களைப் பார்க்காமல் இருக்க முடியலை!ன்னு வாலண்டரியா டிரான்ஸ்பர்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.