(Reading time: 9 - 18 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“ஏன்?”

“எனக்கு நோ ஃபாதர்!...நோ மதர்!...ஒரேயொரு அக்கா...அவங்க...அங்கதான் ஒரு ஹோம்ல செவிலியரா வொர்க் பண்றாங்க!...இன்னமும் கல்யாணம் ஆகலை!”

“ஓ...ஸாரி!” என்றான்.

“இதுல ஸாரி சொல்ல ஒண்ணுமேயில்லை சார்!...அவங்களுக்கு அன்னை தெரஸாதான் ரோல் மாடல்!..அவங்களை மாதிரியே கல்யாணம் பண்ணிக்காம...கடைசி வரை சேவை செய்வதே அவங்க லட்சியம்” என்றவள், “ஆமாம்...நீங்க கோயமுத்தூரிலிருந்து வரும் போது உங்க கைல ஒரு பேப்பர் குடுத்தனுப்பினேனே?...அதை படிச்சீங்களா?” கேட்டாள்.

“ஓ...பிராஞ்ச் டீட்டெய்ல்ஸ் தானே?..படிச்சேனே?” வெகு அலட்சியமாய்ச் சொன்னான்.

“அய்யய்ய...அதில்லை சார்...இன்னொரு பேப்பர்!...எம்.டி.பக்கத்துல நிக்கும் பொது குடுத்தேனே?” என்று காவ்யா சொல்ல,

“ஆமாம்...குடுத்தீங்க!...ஆனா...அதை நான் படிக்கலையே?...ஏன்?...அதுல ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கா?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டான் ரவீந்தர்.

“இன்னிக்குப் போய் படிச்சுப் பாருங்க!...நான் ஏன் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன் என்ற கேள்விக்கான பதில்...அதுல இருக்கும்” என்று சொல்லி விட்டு அடுத்த இருக்கை முன் நின்றிருந்த கோகிலாவுடன் போய் சேர்ந்து கொண்டாள்.

அவள் சென்ற பின் தன் இருக்கையில் அமர்ந்த ரவீந்தர் நிதானமாய் யோசித்தான், “அப்படியென்ன விஷயம் இருக்கும் அந்த காகிதத்துல?”

அறிமுக வேலையை முடித்து விட்டு, காவ்யாவை அவளது இருக்கையில் அமர வைத்து விட்டு நேரே ரவீந்தரின் மேஜைக்கு வந்த கோகிலா, “என்ன சார்?...என்ன நடக்குது இங்கே?...கோயமுத்தூர் பிராஞ்சிலிருந்து நீங்க டிரான்ஸ்பர் ஆகி வந்த நாலாம் நாளே அங்கிருந்து வாலண்டரியா டிரான்ஸ்பர் வாங்கிட்டு வர்றா!ன்னா...என்ன அர்த்தம்?...ஒண்ணையும் ஒண்ணையும் கூட்டிப் பாருங்க...ரெண்டு வரும்!...அவனையும்...அவளையும் கூட்டிப் பாருங்க..காதல்தான் வரும்” என்றாள் கோகிலா. அவள் பேச்சில் கோபமும், ஆதங்கமும் கலந்திருந்தது.

“அய்யய்யோ...நீங்க இத்தனை நாள் கவிதை மட்டும்தான் எழுதிட்டிருந்தீங்க...இன்னிக்கு புதுசா...கதை வேற எழுதறீங்க?...” என்றான் ரவீந்தர்.

“கவிஞர்களை நம்ப முடியாதுங்க!...நாலாப்பக்கமும் காதல் வலை வீசுவாங்க!...எல்லாப் பெண்களையும் ரசிப்பாங்க...வர்ணிப்பாங்க!..” என்றாள் கோகிலா.

“நான் அப்படியில்லைங்க!...ராமன் மாதிரி!” என்று இரு கைகளையும் ஆட்டிச் சொன்னான்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.