(Reading time: 9 - 18 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“பார்ப்போம்...பார்ப்போம்!...எத்தனை நாளைக்குத்தான் உண்மையை மறைக்க முடியும்?..என்னிக்காவது ஒரு நாள் வெளிய வராமலா போயிடும்?” ஆட்காட்டி விரலை எச்சரிப்பது போல் ஆட்டி கோகிலா சொல்ல,

“இருந்தால்தானே வரும்?..”என்று சாதாரணமாய்ச் சொன்ன ரவீந்தர், சட்டென்று ஹஸ்கி வாய்ஸில், “கவிதாயினி மேடம்...இந்த ரவீந்தர் இதுவரைக்கும் எந்தக் காதல் வலையிலும் விழலை!...ம்ம்ம்...அநேகமா...இனிமேல் விழ வாய்ப்புண்டு..எனக்கு இப்பெல்லாம் என் மேலேயே நம்பிக்கை இல்லை” என்றான்.

“ஏன்?...எதை வெச்சு சொல்றீங்க?” கோகிலாவின் கண்களில் இயல்பாய் ஒரு ஆர்வம் தெரிந்தது.

“இந்த ஊரில் என் இதயம் களவு போய் விட்டது!...திருடியவளை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்!...பேசிக் கொண்டுதான் இருக்கின்றேன்!...பொள்ளாச்சிப் பெண்...பொல்லாத பெண்!...ஆனாலும் போக்கிரிப் பெண் அல்ல!” என்றான். மனதிற்குள் அந்த வத்சலாவை நினைத்துக் கொண்டு சொன்னான் ரவீந்தர்.

உதட்டைச் சுளித்துக் கொண்டு அவனை நேர்ப் பார்வை பார்த்த கோகிலா, “பொள்ளாச்சிக்கு வந்த பிறகுதான் காதல் வயப்பட்டு விட்டீர்கள்...அப்படித்தானே?” மனதிற்குள் தன்னை வைத்துக் கொண்டு கேட்டாள் கோகிலா.

“ஆமாம்...அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!” சொல்லும் போது விழிகளால் கோகிலாவை ஈர்த்தான் ரவீந்தர்,

“யாரோ ஒரு பொள்ளாச்சிக்காரி மேல்தான் உங்கள் காதல்!...என் யூகம் சரிதானா? தலையை அழகாய்ச் சாய்த்துக் கொண்டு கேட்டாள்.

“உண்மை!....”

“யார் அந்த பொல்லாத பெண்?” கண்களிரண்டும் படபடக்க, கேட்டாள் கோகிலா.  அப்போது, அவள் இருதயம், அவன் வாயிலிருந்து தன் பெயர் வர வேண்டும் என்கிற ஆவலில், வேக வேகமாய்த் துடித்தது.

“கவிதையாய் இருக்கும் கவிதை” என்று அவன் சொன்னதும் “குப்”பென்று பூரித்துக் கிளம்பிய உற்சாகம் அவள் கண்களில் கண்ணீரைத் தந்து விட,

“அப்புறம் பேசலாம் சார்” என்று கரகரத்த குரலில் சொல்லி விட்டு அங்கிருந்து தன் இருக்கைக்குச் சென்றாள்.  “சந்தோஷத்திலும் கண்ணீர் வருகின்றதே?” மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அவள் நீண்ட நேரம் ரவீந்தருடன் பேசிக் கொண்டிருப்பதை தன் இருக்கையிலிருந்து பொறாமையோடு கவனித்த காவ்யாவிற்குள் ஒரு எரிமலை உருவாகிக் கொண்டிருந்தது. “சக்காளத்தி...நான் என்ன பொழப்புக் கெட்டா கோயமுத்தூரிலிருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.