(Reading time: 7 - 14 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

எப்படி நடிக்கிறாள், இவையெல்லாம் என்று யோசிக்க அப்போது தான் உணர்ந்தான்.

 நான் என்ன செய்து வைத்து இருக்கிறேன்... அவள் யாரிடம் பேசினால் என்ன... அவன் அவளுடைய சகோதரனாக இருக்கலாம் நண்பனாக இருக்கலாம் உறவினனாக இருக்கலாம்... மற்றவர்களிடம் பேசுவது அவரவர் உரிமை... அந்த உரிமையை தவறென்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும் போது நான் ஏன் இப்படி செய்தேன் என்று தன்னையே நொந்து கொண்டவன் கோபத்தில் தன் மனதில் அவள் இருப்பதை உணராமல் போய் விட்டான்.

ஜனனிக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை.. இத்தனை நாள் எதையும் கண்டு கொள்ளாதது போல இருந்தாலும் அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்து இருக்கிறான்.

ஆனால் வந்ததும் வராததுமாக ஏன் இவ்வளவு கோபம் என்று யோசிக்க அவள் மொபைல் அழைத்தது. எடுத்தவள் அழைப்பது ஆபிஸில் வேலை பார்க்கிற பெண் என்பது புரிய எடுத்து ஹலோ என்றாள்.

மேம்... சார் அவங்க டிரிப் முடிச்சிட்டு உங்களை பார்க்க நேராக இங்கே வந்தால் நீங்கள் அவங்களை பார்க்கும் ஆசையில் லீவ் போட்டு விட்டு வீட்டுக்கு போய் விட்டீர்கள். நீங்கள் லீவ் என்று தெரிந்ததும் சார் முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றம்... ஒரு பைலில் ஷைன் கேட்டதற்கு நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லி விட்டு வேகமாக கிளம்பி வந்து விட்டார்கள்... உங்களிடம் சாரை பற்றி பேசினால் உங்கள் முகம் வெட்கத்தில் சிவந்து போய் விடுகிறது... சினிமா லவ் விட உங்கள் லவ் தான் டாப் மேம் என்று ஏதேதோ சொல்ல இதற்கு மேல் அவள் மனதில் எந்த வார்த்தைகளும் நுழையவில்லை.

வேகமாக சமயலறைக்குள் சென்றவள் அவனுக்கு பிடித்த மாதிரி சர்க்கரை குறைவாக போட்டு ஏலக்காய் மணத்துடன் தயார் செய்தவள் அவனுக்காக எடுத்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.

உள்ளே சென்றாலும் திட்டுவான், வெளியே நின்றாலும் திட்டுவான்... பேசாமல் உள்ளே செல்லலாம் என்று உள்ளே சென்றவள் டீ என்று அவன் முன் நீட்டினாள்.

அவனுக்கும் அந்த நேரம் அது தேவையாக இருந்தது... அதோடு அதன் நறுமணமும் அவனை இழுக்க மறுப்பு சொல்லாமல் வாங்கி கொண்டான். நான் தனுவை கூட்டிட்டு வருகிறேன் என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் ஓடியே விட்டாள்...

அதன் பிறகு வந்த நாட்கள் ஜனா எந்த ஒரு விஷயத்திற்காகவும் கோபப்படவும் இல்லை.. அதற்காக நெருங்கி வரவும் இல்லை... ஜனனி என்பதாக ஒருத்தி அவர்களுடன் இருப்பதாகவே

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.