(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

ந்த மிரட்டலான குரல் ஆங்கிலப் பேராசிரியருடையது. அவர்களைப் பார்த்ததுமே அவருக்குப் புரிந்து விட்டது இருவரும் ஒரே வகுப்பில்லை என்பது. இதைத் தடுக்கத் தான் ஒவ்வொரு டிபார்ட்மென்ட் மாணவர்களுக்கு வெவ்வேறு வண்ணங்களில் யூனிபார்ம் கொடுத்திருந்தனர் போலும்.

ரம்யாவைப் பார்த்து, “நீ இவன் கிளாசா?”

இல்லை என அவள் தலையசைக்க,

“அப்புறம் அவன் கிளாஸ்ல வந்து உக்கார்ந்துட்டு இருக்க!” அவர் கோபமாகக் கேட்கவும்

இல்லை சார், சும்மா பேசிட்டு இருந்தோம் என தினேஷ் பதிலளிக்க

நான் உன்னைக் கேட்கல, இந்த மாதிரி அடுத்த கிளாஸுக்கு வர்றது, பேசுறதுலாம் இருக்கக் கூடாது. அடுத்த தடவை நீங்க இப்படிசேர்ந்து உக்கார்ந்து பேசிட்டு இருக்கறத பார்த்தேன்னா சும்மா விடமாட்டேன் என்று ஆங்கிலப் பேராசிரியர் எச்சரித்தார். அவர்களை ஒன்றாக வகுப்பில் கண்ட  அந்த ஆங்கிலப் பேராசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருப்பவர். எப்போதாவது பெற்றோர் சந்திப்பில் தன்னைப் பற்றி அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ என ரம்யாவிற்கு சிறிது பயம் வந்தது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

வகுப்புகளில் சந்திப்பதையும் பேசுவதையும் தவிர்த்து, காரிடார் அல்லது பொதுவான இடங்களில் கண்களால் பேசிக்கொண்டு மற்ற கதைகளையெல்லாம் போனில் பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டாவது செமஸ்டர் மிகவும் விரைவாகச் சென்றது போலிருந்தது ரம்யாவுக்கு.  வகுப்புகள் முடிய நாட்கள் குறைவாக இருந்தன. ஸ்டடி ஹாலிடேஸ் தொடங்கிய பின்னர், தினேஷைத் தினமும் பார்க்கவும் முடியாது. இருவரும் காதலில் பைத்தியம் பிடித்தவர்கள் தான் எனினும் படிக்கும் விஷயங்களில் கவனத்தைச் சிதற விடாமல் தான் இருந்திருந்தார்கள். தினேஷ் யோசித்துப் பார்த்தான், முதல் செமஸ்டர்  ரம்யா தனது காதலுக்கு  சம்மதிப்பாளா என்ற உணர்வு அவன் எண்ணங்களையும் அவனையும் அவளையே சுற்றிச்சுற்றி வர வைத்து மனஉளைச்சலைத் தந்தது. இந்த செமஸ்டரில் அவள் சம்மதம் சொல்லி என்னுடையவள் என்றான பின் அவளைத் தேடித் தவிக்கும் தவிப்பில்லை. மனது நிம்மதியான உணர்வில் தெளிவாகவும் இருக்கிறது. பழைய அவஸ்தைகள் எதுவுமில்லை, எப்போதும் நான்  உன்னுடன் இருப்பேன் என்ற ரம்யாவின் வாக்குறுதி அவனுக்கு பெரிய  மனபலமே தந்துவிட்டது. பரீட்சைகளுக்கு ராபினுடன் சேர்ந்து சில நாட்கள் படித்தான் தினேஷ். ஹால் டிக்கெட் வாங்க வந்த ஒரு நாள் கிடைத்த சந்தர்ப்பத்தில் இருவரும் பார்த்துக் கொண்டனர்.

இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கின. இம்முறையும் எல்லாருக்கும் அதே

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.