(Reading time: 4 - 8 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

தொடர்கதை - கனவே கலையாதே.... - 05 - தனுசஜ்ஜீ

திடீரென்று கண் விழித்த கதிர் தர்ஷினி அமர்ந்திருப்பதை பார்த்து,

என்னாச்சுங்க...

அவனை பார்த்து லேசாக சிரித்தாள்.

தூக்கம் வரலையாங்க....

ம்ம்.... புது இடம்ல அதுதான்.

சரி நா கீழ படுத்துக்குறேன். நீங்க படுங்க என்று அவன் எழுத்திருக்க.....

கதிர் என்று அவள் அழுத்தமாக கூற,

அவளை பாவமாக பார்த்தவன். என்ன ஏன் இப்புடி கஷ்டபடுத்திரிங்க. உங்கள சந்தோஷமா வச்சிக்க தான் கல்யாணம் பண்ணி கூட்டி வந்தேன். வந்த முதல்நாளே உங்கள ரொம்ப கஷ்டபடுத்துறேன்.

அப்புடிலாம் இல்ல கதிர்.

பின்ன மணிய பாருங்க நாலாகுது இன்னும் தூங்காம என்ன யோசிக்கிட்டு இருக்கிங்க.

அது ஒன்னுமில்ல கதிர் என் புருஷனோட வீரதீர செயல்கள் நினைச்சி பார்த்தனா. பாருங்க மணி ஆனதே தெரில.

அவன் அவளை செல்லமாக முறைக்க....

முறைச்சாளும் அழகாதான் இருக்கிங்க கதிர்.

போதுங்க நீங்க இப்ப தூங்க போறிங்களா..... இல்லையா....

இப்ப நா தூங்குனா அடுத்த நாள் நைட் தான் எந்திரிப்பேன் கதிர்.

பரவாலங்க நீங்க தூங்குங்க.

எது தூங்குறதா நல்லாயிருக்கு கத. வந்த முதநாளே என் அத்தைய எனக்கு வில்லி ஆக்கிருவிங்க போல,

எங்க அம்மா வில்லியா....

பின்ன இன்னும் நாம கல்யாண பண்ணிட்டு வந்த பிரச்சனையே முடில. இதுல நா தூங்குனா அவ்ளோதான்.

அவன் லேசாக முகத்தை சுருக்கி சாரிங்க அம்மா அப்புடி தான்.

அதுல எதுவும் தப்பில்லை கதிர்.

சரி ஒரு அஞ்சு நிமிஷம் வந்துடுறேன்.

எங்க போறிங்க...

வந்துடுறேங்க...

கதிர்....

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.