(Reading time: 4 - 8 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

அவன் அவளை பார்க்க...

அவள் முகத்தை ஒரு மாறி வைத்துக்கொண்டு பாத்ரூம் எங்க இருக்கு கதிர்.

சாரிங்க... வாங்க... அவர்கள் அறையின் கதவை திறக்க...

வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொரு தினுசில் படுத்திருந்தனர். அந்த சிறிய அறை அனைவரையும் நிறைத்துக் கொண்டது.

கதிர் கையோடு மொபைல் டார்ச்சை ஆன் செய்து, தர்ஷீ என் கை புடிச்சி என் பின்னாடியே வாங்க....

ஒகே கதிர் என்று அவள் ஹஸ்கி வாய்சில் விடைக் கொடுத்தாள்.

கதிருக்கு இது பழகி போனது என்பதால், அவன் வேகமாக தாண்ட, அவள் யாரையாவுது மிதித்து விடுவோமா என்று மிகவும் கவனமாக தாண்டினாள்.

ஒரு வழியாக இருவரும் அந்த ஆற்றை கடந்து விட்டனர்.

அவளுக்கு பாத்ரூமை காட்டிவிட்டு வெளியே நின்றான்.

உள்ளே சென்றவள் முகத்தை மட்டும் கழுவி வெளியே வர,

அவன் தயங்கியபடியே, தர்ஷீ எங்க வீட்ல இன்னும் டாய்லெட் கட்டல.... இங்க பக்கத்துல பப்ளிக் டாய்லெட் தான் போகனும். என்று அவன் முகத்தை அசெளகரியமாக வைத்தபடியே கூற,

ம்ம்... பராயில்ல கதிர் இடத்துக்கு தகுந்த மாறி நா இருந்துப்பேன். டோன்ட் வொரி என்று அவள் சிரித்த முகமாக தான் கூறினாள்.

ஆனால் அவனுக்குதான் மனம் ஒப்பவில்லை.

அவளை அறையில் விட்டவன். அருகில் உள்ள நாயர் கடைக்கு சென்றான். செல்லும் வழியெங்கும் நான் இத எப்புடி மறந்தேன். மத்த விஷயம் கூட பரவால்ல. ஆனா இந்த விஷயம் கஷ்டம்ல. இவ்ளோ நாலும் நம்ம வீட்டு பொண்ணுங்களும் இந்த கஷ்டம் தான அனுபவிக்கிறாங்க. எனக்கு இது ஏன் தெரியாமயே போச்சு. ச்ச இவ்ளோ நாள் இத கூட கவனிக்காம இருந்துருக்கேன் என்ன மனுஷன் நான். இல்ல இனி அவங்களே சொன்னாலும் பரவால தனியா வீடு பார்க்க வேண்டியது தான். என்று எண்ணிக்கொண்டே டீ கடையில் இரண்டு டீயை வாங்கியவன். கூடவே சுடாக போட்ட வடையையும் வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி எட்டு போட்டான்.

நல்ல வேளையாக யாரும் எந்திரிக்கவில்லை.

அறை உள்ளே சென்றவன். அவளுக்கு டீயை ஊற்றி ஒரு டம்ளரில் குடுக்க.... இதுக்குதான் போனிங்களா கதிர். எனக்கு இப்பதான் டீ குடிச்சா நல்லாயிருக்குனு தோனுச்சி என்று அவள்

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.