தேன்மொழி தனிமையில் ஏதேதோ எண்ணியபடி கலங்கி இருந்தாள். நல்லவேளையாக அசோக் அரை மணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்துவிட்டான். அசோக்கை கண்டவள்.
அண்ணா இன்னும் உள்ளே இருந்து யாரும் வரவே இல்லணா...என்ன ஆச்சுன்னே தெரியலை ரொம்ப பயமா இருக்குன்னா.
பயப்படாதம்மா கார்த்திக் வந்தோன கேட்டு பாக்குறேன். கதிர் பேசுற நிலைமையில இல்லன்னு நினைக்கிறேன்.
ஏற்கனவே கார்த்திக் மேல் கோபத்தில் இருந்தவள்.நீங்க கார்த்திக் கிட்ட கேட்கிறது வேஸ்ட் அண்ணா ஏன்னா அவர் பிரெண்ட்ட விட்டுக்கொடுக்க மாட்டாரு.
அப்படி இல்லம்மா அவர் நீ பயந்துற கூடாதுனு சொல்லாம இருந்திருப்பாரு.
என்னவோ போங்க அண்ணா நல்லவன்னு நினைக்கிறவங்க எல்லாரும் இப்படிதான் ஏமாத்துறாங்க.
அதற்குள் கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணிவிட்டு கார்த்திக் வந்துவிட்டான்.
வந்தவன் நேராக இவர்களிடம் தான் வந்தான். டாக்டர் எதுனா சொன்னாங்களா என்று கேட்க,
தேன்மொழி அவனை முறைக்க..... அசோக் தான் பதில் சொன்னான்.
இன்னும் இல்ல கார்த்திக்.உள்ள இருந்து யாரும் இன்னும் வெளியவே வரல.
ஓ......என்று சோர்ந்து போய் இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
அசோக் கார்த்திக்கின் அருகில் அமர்ந்து,
என்ன ஆச்சு கார்த்திக்??? எப்படி ஆச்சு??? என்று அசோக்கும் தடுமாறிய குரலில் கேட்டான்.
அசோக்கை நிமிர்ந்து பார்த்தவன். சுற்றுமுற்றும் பார்க்க அனைவரும் போவதும் வருவதுமாக இருந்தனர். நாம அங்க போய் பேசலாமா என்று ஒரு தனிமை இடத்தைக் காட்டினான்.
போலாம் கார்த்திக்.
நானும் வருவேன் என்று தேன்மொழி கூற,
அவன் தேன்மொழியை பார்க்க....
அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
இருக்குற பிரச்சினைல இவ வேற என்று செல்லமாக அலுத்துக் கொண்டான்.
பின்பு அசோக் தான் நீ இருமா ..... டாக்டர் யாராவது வந்தா எங்க கிட்ட சொல்லுமா.
அவள் மனசே இல்லாமல் சரி என்று விட்டாள்.
panriga atha ungal ta puticha onnu sis
Kathir flashback ennavo?.. Rmba adi vangirparu pola.
Waiting for next episode....
Karthi moli ena panna poraga
Waiting for your next episode
Unga kitta ondru ketkkanum.unga peyer danu sajji appadinna enna artham.