ஆஸ்பிட்டலை விட்டு வெளியே வந்த ஹரிஹரன் பார்க்கிங்கில் விட்டிருந்த தனது பைக்கில் அவந்திகாவை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். காஞ்சிபுரம் அடுத்து நேராக திருவண்ணாமலை நோக்கி வந்தான். கையில் ஏடிஎம் கார்டு இருந்தபடியால் வழியெங்கும் பணப் பிரச்சனையில்லாமல் இருந்தது. ஆனாலும் பயணத்தின் போது அவந்திகா பயந்துக்கொண்டே அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டே பயணப்பட்டாள். அவளிடம் எதுவும் பேசாமல் வந்தான் ஹரி. அவனுக்கும் என்ன பேசுவதென ஒன்றுமே புரியவில்லை
இன்று பௌர்ணமி வேறு சரி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று அங்கு பேசுவோம் மக்கள் நெருக்கடியில் யாரும் நம்மளை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தான்.
நினைத்தபடியே திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு சென்றவன் பார்க்கிங்கில் பைக்கை விட்டுவிட்டு அவந்திகாவை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றான். அங்கு கூட்டம் அதிகமாக இருக்கவே அதை விடுத்து கிரிவலப் பாதையில் நடந்தவன் அங்கு ஒரு சிறிய கோயில் இருக்கவே அங்கு அமைதியாக ஒரு இடத்தில் அவளையும் அமர்த்திவிட்டு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான்
”இந்தா சாப்பிடு”
நீங்க”
“நானும்தான் சாப்பிடு” என சொல்லி இருவருமாக சாப்பிட்டு முடித்தனர்.
மக்களின் கூட்டமும் மிதமாக இருந்தது. பொழுது விடியும் நேரமும் வந்தது. மணியை பார்த்தான். மணி 4.30 என காட்டவும் பெருமூச்சு விட்டான். அவனைப் பார்த்த அவந்திகா
”என்னங்க ஆச்சி”
“இல்லை மணி நாலரை அன்னதான சமையல் செய்யற நேரம் இத்தனை வருஷத்தில ரெண்டு முறை தவறி போச்சி, அன்னிக்கு உனக்காக ஊட்டிக்கு போனேனே அன்னிக்கும் இன்னிக்கும்” என கவலையாகச் சொல்லவும் அவள் அவனிடம் பாவமாக
”என்னை மன்னிச்சிடுங்க சாரி என்னாலதான் எல்லாமே”
“சீ சீ அப்படியில்லை லஷ்மி இல்ல அவந்திகாதானே உன் பேரு”
“ம்”
“ஏன் உன்னைப்பத்தி என்கிட்ட சொல்லலை சொல்லியிருந்தா நான் உன்னை பத்திரமா பார்த்துக்கிட்டிருப்பேன்ல என் மேல நம்பிக்கையில்லயா உனக்கு”
“அப்படியில்லைங்க”
“வேற எப்படிங்க”
“என்னால நீங்களும் அப்பாவும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சிதான் சொல்லலை. கொஞ்ச