Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 21 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Idhayathile Oru Kanavu
Pin It

Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 05 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

ஜெயமுருகனா? யாரைச் சொல்றீங்க?” – சித்ராவின் கேள்வியில் சேர்ந்திருந்த கடினத்தன்மை சுரேஷை அவள் பக்கம் பார்க்க வைத்தது.

“உனக்குத் தெரிஞ்ச அதே ஜெயமுருகன் தான் சித்ரா. கொஞ்சம் வருஷம் முன்னாடி நம்ம ஷண்முகராஜன் வீட்டுல வேலை பார்த்தானே அவன் தான். இப்போ பெரிய ஆள் ஆயிட்டான். எனக்கு அவன் பெரியப்பாவை முன்னாடியே தெரியும். இவன் அவர் சொந்தக்காரன்னு தெரியாது. அவர் நம்ம தமிழ்நாட்டுல செஞ்சுட்டு இருந்த ஆட்டோ மொபைல் பார்ட்ஸ் பிஸ்னஸ இந்தப் பையன் நல்லா எக்ஸ்டன்ட் செய்துட்டான். முதல்ல பக்கத்து ஸ்டேட்ஸ் அப்புறம் நார்த்ன்னு போனான். இப்போ வெளிநாட்டுக்கு கூட சப்ளை செய்றாங்களாம். அவனோட பெரியப்பா வாயைத் திறந்தாலே அவனைப் பத்தி தான் பேசுறார். இத்தனைக்கும் அவன் சொந்த செலவுக்குன்னு சின்னதா ஒரு தொகை எடுத்துக்குறது தவிர சம்பளம், லாபத்துல பங்குன்னு எதையுமே தொடுறது கிடையாதாம். அவரு அவனுக்கே அந்த பிஸ்னஸ் கொடுத்துடலாம்னு இருக்கார். அதைப் பத்தி லீகல் டாகுமென்ட்ஸ் ரெடி செய்ய என்னை பார்க்க வந்திருந்தார்.”

சித்ராவின் முகத்தில் பல ரகமான உணர்வுகள் வந்துப் போனது. யோசனையுடன் பின் சீட்டில் இருந்த புவனேஸ்வரியை திரும்பிப் பார்த்தாள். புவனேஸ்வரி அந்தப் பார்வையை எதிர்பார்த்தவள் போல அத்தையின் பார்வையை நேராக, அமைதியாக எதிர் கொண்டாள். சித்ராவிற்கு ஓரளவிற்கு நிம்மதி ஏற்பட்டது. ஆனால் கணவன் மேலே கோபமாக வந்தது.

“அவனோட தங்கச்சி வீட்டுக்கு எல்லாம் புவனேஸ்வரியை எதுக்கு அனுப்பி வைக்குறீங்க?” – சித்ரா சுள்ளென்று கணவரிடம் எரிந்து விழுந்தாள்..

“என்ன பேசுற சித்ரா? புவனேஸ்வரிக்கு இன்னைக்கு வரைக்கும் ஒரு பிரென்ட் கூட கிடையாது. அவ வயசுப் பொண்ணுங்க எல்லாம் மொபைல், வாட்ஸ்அப், பேஸ்புக்ன்னு இருக்காங்க. இவ்வளவு நாள் தான் உன் அண்ணனும், ராஜியும் அவளை சுதந்திரமா இருக்க விடலை. இப்போவாவது அவ ப்ரீயா இருக்கட்டுமே. அந்தப் பொண்ணு ஆருத்ரா ரொம்ப நல்ல மாதிரி.” – சுரேஷ் எந்த படபடப்பும் இல்லாமல் அமைதியாக மனைவிக்கு விளக்கம் கொடுத்தார்.

சித்ரா பல்லைக் கடித்தாள். விபரம் புரியாமல் பேசும் மனிதரிடம் என்ன சொல்லி விளக்குவது?

மீண்டும் புவனேஸ்வரியை திரும்பிப் பார்த்தாள். புவனேஸ்வரி இப்போது ஜன்னலில் பார்வையை பதித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிள்ளை பெறா விட்டாலும் ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லும் சொற்றொடரின் அர்த்தம் சித்ராவிற்கு இப்போது புரிந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vetri yin selviVetri yin selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 05 - Chillzee StoryVinoudayan 2021-02-16 22:36
Nice epi sis👏👏 Chithra aunty thinking ok than but aanalum jai @ eesh love :sad: bhuvans and jai present meet panna jai oda reaction yennavaga irukum :Q: eagerly waiting for next update sis (y)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 05 - Chillzee Storymadhumathi9 2021-02-16 21:54
:Q: chitra athai than annanin ponnu nalla irukka vendum endru solli iruppatgal endru ninaikkiren.interesting epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 05 - Chillzee StoryAdharvJo 2021-02-16 19:48
Mudhal speed breaker laye thadam maripocha :eek: :eek: appadi ena anadham :Q: Chithra athai ku jai oda status pidkalayo :Q: however Esh manasula ivaru oru strong place pidichitaru 😍😍😍😍 interesting update ma'am 👏👏👏👏👏👏 look forward to see what happens next.
Thank you
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 05 - Chillzee StoryRiswin 2021-02-16 18:51
Cute episode.... :-) Yen love breakup aagirichi??.. Jai um eeswari um again meet panna enna aagum??..marupadiyum love track la train varuma?..pakalam... Waiting for next episode... Want more pages.... (y)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 05 - Chillzee StorySaraniya 2021-02-16 17:19
Nice episode :hatsoff: .waiting for next episode :-) .
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top