This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“இவங்க என் ஃபிரென்ட், சக்தி” – ப்ரியம்வதா சொல்லி முடிப்பதற்கு முன்பே ஸ்ரீனிவாஸ் நட்பும் ஆர்வமுமாக சக்தியிடம் கை குலுக்க கையை நீட்டினான்.
“சக்தி மேடம்! உங்களை நேருல சந்திப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்க ப்ரியம்வதாக்கு ஃபிரென்டா. வாட் அ சர்ப்ரைஸ்!” – ஸ்ரீனிவாஸின் பேச்சில் உற்சாகம் கலந்திருந்தது.
“உங்களுக்கு ஏற்கனவே அவங்களை தெரியுமா ஸ்ரீனிவாஸ்?” – ப்ரியம்வதா சந்தேகத்துடன் கேட்டாள்.
“எனக்கு மட்டுமா, சென்னைல இருக்க எல்லோருக்குமே அவங்களை தெரியும் ப்ரியம்வதா. நீங்க ரிசைன் செய்திருக்க கூடாது மேடம்” – ஸ்ரீனிவாஸ் ப்ரியம்வதாவிற்கு பதில் சொல்லியக் கையோடு சக்தியிடம் ஆதங்கத்தை வெளிப் படுத்தினான்.
“அது ஓல்ட் நியூஸ் ஸ்ரீனிவாஸ். அதை மறந்து விட்ருவோம். இப்போ விநாயக் பத்தி பேச வந்திருக்கேன்.” – சக்தி சாதாரணமாக பேச்சை தொடங்கினாள்.
“வினாயக்கா, அவரை உங்களுக்கும் தெரியுமா? ஷாக்கிங்கா நிறைய விஷயங்கள் நடந்திருச்சு. க்ரைம் கொலை இதை எல்லாம் நான் நியூஸா படிச்சிருக்கேன். இப்போ தான் முதல் முறையா பக்கத்துல இருக்கேன். துப்பாக்கியால சுடுது, வவ்வால் மாதிரி பறக்குது, ஹெலிகாப்டர் மாதிரின்னு என்ன எல்லாமோ சொல்றாங்க. இன்னும் கூட பயமா தான் இருக்கு. ”
“புரிஞ்சுக்க முடியுது ஸ்ரீனிவாஸ். வினாயக் என்னோட குட் பிரென்ட். ப்ரியம்வதாவை கூட எனக்கு அவர் வழியா தான் தெரியும். வினாயக் அவர் கொலை செய்யலைன்னு சொல்றார். அதனால பொதுவா விசாரிக்கலாம்ன்னு தோணிச்சு.”
“வினாயக் லக்கி பெர்சன் சக்தி மேடம். நீங்க, ப்ரியம்வதான்னு அருமையான ஃப்ரெண்ட்ஷிப் சர்க்கிள் வச்சிருக்கார். அவருக்கு ஹெல்ப் செய்ய நான் என்ன செய்யனும், சொல்லுங்க அப்படியே செய்றேன்.”
ஸ்ரீனிவாஸின் பேச்சில் போலித்தன்மை தெரியவில்லை. சக்தி இயல்பாகவே தொடர்ந்துப் பேசினாள்.
“நீங்க என்னை மேடம்னு கூப்பிடனும்னு இல்லை. சாதாரணமா பேசினா போதும். இந்தக் கொலை நடந்தப்போ நீங்க எங்கே இருந்தீங்க?”
“நான் ப்ரியம்வதா, கலைவாணி ஆன்ட்டி, ராகுல் எல்லோரும் திருவிழால இருந்தோம். நீங்களும் எங்களைப் பார்த்தீங்களே. ப்ரியம்வதா பாடினதை பத்தி பாராட்டி பேசிட்டு இருந்தோம். தூரத்துல சின்னதா சத்தம் கேட்டுச்சு. பலூன் எதோ வெடிச்சிருக்கும்னு நாங்க
sakthi k direct panura aaluvukk Rahul rombhave theliva pesuraru???
Priya kaga srinvas ethukku uruganum
Awesome narration then ma'am 👏👏👏👏👏👏👏 unga interrogation simply superb 👌
Look forward to read the next epi.
Thank you.