This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
பொங்கி வந்த கோபத்தை காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளே அடக்கினாள் அமுதவள்ளி. கதிர் பேசியது எதுவும் காதில் விழாததைப் போலக் காட்டிக் கொண்டாள்.
“ஒருத்தங்க பேப்பர் படிச்சுட்டு இருக்குறப்போ, இப்படி பிடுங்குறீங்க? மேனர்ஸ்னா என்னன்னே உங்களுக்கு தெரியாதா?” – அமுதவள்ளி கதிரின் கையில் இருந்த பேப்பரை திரும்ப பிடுங்கிக் கொண்டாள்.
“எங்க வீட்டுக்கு வேலை செய்ய வந்துட்டு எனக்கு மேனர்ஸ் இல்லைன்னு சொல்றீயா? வாய் துடுக்கு உனக்கு அதிகம்” – கதிர் வேண்டுமென்றே அமுதவள்ளியிடம் இருந்து பேப்பரை மீண்டும் பிடுங்கினான்.
“நீங்க சொல்றது தப்பு! நான் உங்க அம்மாக்கு உதவியா இருக்க வந்திருக்கேன். உங்க வீட்டுல எல்லோருக்கும் வேலை செய்ய வரலை” – அமுதவள்ளி கதிர் கையில் இருந்த பேப்பரை மீண்டும் இழுத்தாள். கதிர் இப்போது அதை விடவில்லை! அமுதவள்ளியும் விட்டுக் கொடுக்காமல் இழுத்தாள்.
அமுதவள்ளியிடம் எதையோ கேட்க திரும்பி வந்திருந்த பானுமதி இவர்களின் பேப்பர் பிடுங்கல் சண்டையை கண்டு ரசித்துக் கொண்டு நின்றிருந்தார்.
வீட்டுக்கு ஒரே பிள்ளையாக வளர்ந்ததால் சிறுப் பிள்ளையாக இருந்தப்போது கதிர் அமைதியாக இருப்பான். இப்போது வளர்ந்தப் பிறகு அதற்கு ஈடுக்கட்டும் விதத்தில் அவனிடம் குறும்புத்தனமும் வாயாடும் தன்மையும் வந்திருந்தது. அவன் படித்த படிப்பும், தனியாக உருவாக்கி நடத்தும் பிஸ்னஸும் கூட அதற்கு காரணம்.
அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், வேலை செய்பவர்கள் என அனைவரிடமும் இப்படி நடந்துக் கொள்வது கதிரின் வாடிக்கை. இந்த ஊரில் பெரும்பாலனவர்கள் கண்ணனின் விளையாடல்களை போல கதிரின் பேச்சுக்களை விளையாட்டாக எடுத்துக் கொண்டு சிரிப்பார்கள். பெண்கள் சிலர் அதிகமாக சிரித்து குழைவார்கள். சிலர் எரிந்து விழுவார்கள். ஆனால் அமுதவள்ளியைப் போல கதிருடன் ஏட்டிக்கு போட்டிக்கு நிற்பவர்கள் அபூர்வம்!
கதிரிடம் இருந்து பேப்பரை இழுக்க முயற்சி செய்துக் கொண்டிருந்த அமுதவள்ளி எதேச்சையாக பானுமதி அங்கே நிற்பதைக் கவனித்தாள். தானாக பேப்பரில் இருந்து கையை விலக்கிக் கொண்டாள்.
“என்ன மிஸ் மெட்ராஸ் இவ்வளவு தானா உன் வீரம்?” – கதிரும் அம்மாவை கவனித்தான். இருந்தாலும் அமுதவள்ளியை சீண்டுவதற்காக கேட்டான்.
அமுதவள்ளி அவனை மதிக்காமல் பானுமதியிடம் சென்றாள்.
“சாரி மேடம். நானே வரணும்னு கிளம்பினேன்.” – அமுதவள்ளி.
cool and interesting update ma'am 👏👏👏👏👏👏 ayush thirundhitara
look forward to read the next update.w
Thank you.
cool and interesting update ma'am 👏👏👏👏👏👏 ayush thirundhitara
look forward to read the next update.
Thank you.