“இருக்கட்டும் அமுதா. வா, நாம சேர்ந்தே சாப்பிடலாம். கதிர் நீயும் வாயேன்” – பானுமதி தான் பார்த்ததை பற்றி கேட்காமல் உணவைப் பற்றி பேசினாள்.
“நான் சாப்பிட்டாச்சே அம்மா. நீங்க சாப்பிடுங்க” – கதிர்.
“பரவாயில்லை வா, அது பர்ஸ்ட் இன்னிங்க்ஸ், இது செகன்ட் இன்னிங்க்ஸ்.”
“அம்மா இப்படி பாசத்தோட கூப்பிடும் போது வராமல் இருக்க முடியுமா? செகன்ட் இன்னிங்க்ஸ ஒரு வெட்டு வெட்ட வேண்டியது தான்.”
உணவு மேஜையில் எந்த இடத்தில் அமர்வது என்று புரியாமல் அமுதவள்ளி தள்ளி நின்றாள்.
“ஏன் அமுதா அங்கேயே நிக்குற? வா வந்து என் பக்கத்துல உட்காரு” – பானுமதி.
அமுதவள்ளி பானுமதி பக்கத்தில் இருந்த நாற்காலியை சத்தம் வராமல் மெதுவாக இழுத்து அமர்ந்தாள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பானுமதியைப் பார்த்தாள்.
பானுமதியும் அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தார். அமுதவள்ளி நேர்த்தியாக நாற்காலியை இழுத்து அமர்ந்த விதம் அவரின் கவனத்தை தப்பவில்லை.
“இன்னைக்கு இடியாப்பம் கடலைக்கறி அமுதா. உனக்குப் பிடிக்குமா?” – பானுமதி கதிருக்கு எடுத்துக் கொடுத்து விட்டு, அமுதவள்ளிக்கும் எடுத்து தட்டில் வைத்தார்.
“அநியாயமா இருக்கும்மா! வேலைக்கு வச்சு, சம்பளமும் கொடுத்து, அவங்களுக்கு நீங்க இடியாப்பம் எடுத்துக் கொடுக்குறீங்க? இதெல்லாம் வேற எங்கேயாவது நடக்குமா!!!!?” – கதிர் அக்ஷன் திரைப்பட ஹீரோ போல வீராவேசமாக கேள்வி கேட்டான்.
“கதிர்! என் விஷயத்துல தலைப் போடாதேன்னு உன் கிட்ட பலத் தடவை சொல்லிட்டேன்” – பானுமதி கதிரின் பேச்சைக் கண்டுக்கொள்ளாமல் அமுதவள்ளிக்கு கடலைக்கறியை எடுத்து ஊற்றினாள்.
அமுதவள்ளிக்கும் கதிர் சொல்வது சரி என்று தோன்றியது. அதற்காக அவன் முன்னிலையில் அதை சொல்ல மனசு வரவில்லை.
“நானே எடுதுக்குறேனே மேடம். உங்களுக்கும் நான் செர்வ் செய்றேன்” – அமுதவள்ளி கையை நீட்ட, பானுமதி மறுப்பு எதுவும் சொல்லாமல் கையில் இருந்த கரண்டியை அவளிடம் கொடுத்தார்.
அமுதவள்ளிக்கு சமையல், உணவு பரிமாறுதல் எதிலும் அனுபவம் கிடையாது. வீட்டில் இருக்கும் போது சித்தி ராதா அவளுக்கு எப்போதும் பரிமாறுவாள். மற்ற இடங்களில் வேலைக்காரர்கள் இருப்பார்கள், இலையென்றால் அவளே பர்கர், ப்ரெட் சான்ட்விச் என ரெடிமேட் உணவுகளை தேர்வு செய்வாள்.
தன்னுடைய முதல் பரிமாறும் அசைன்மெண்ட்டை வெகு சீரியசாக எடுத்துக் கொண்ட
cool and interesting update ma'am 👏👏👏👏👏👏 ayush thirundhitara
look forward to read the next update.w
Thank you.
cool and interesting update ma'am 👏👏👏👏👏👏 ayush thirundhitara
look forward to read the next update.
Thank you.