அவனை அணைத்தபடியே தர்ஷினி இருக்க......
தர்ஷீ... என்று அழைத்தபடியே அவளை முன்னே கொண்டுவந்தான். அவள் முகத்தை நிமிர்த்தியவன். அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டபடியே, தர்ஷீ....
ம்ம் .....
உங்களுக்கு நான் இருக்கேன்.அம்மாவா..... அப்பாவா..... பிரெண்டா......ஓகே வாங்க இனிமேல் நீங்க ஃபீல் பண்ணவே கூடாது என்கூட இருக்கும்போது,
அவன் கூறிய வார்த்தையில் மன நிம்மதி வர பெற்றவளாய், தன் கன்னத்தில் குழி வில அழகாக சிரித்தாள்.
அவள் சிரிப்பை கண்டவனது பார்வை அவள் கன்னத்து குழியில் வந்து நின்றது. அந்தக் குழி அவனை ஏதோ செய்தது. அவளது நெருக்கமும், அவளது சிரிப்பும் ஆண்மகனின் உணர்ச்சிகளை அசைத்து பார்க்க..... நொடியும் தாமதிக்காது அவளது கன்னக்குழியில் தன் முதல் முத்தத்தை அழுத்தமாக பதித்தான்.
அவனது செயலில் நொடியில் அதிர்ந்தவள். அடுத்த நிமிடம் அவன் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
தன் இதழை பதித்தவன் அவளது கன்ன மென்மையில் மூழ்கி ஊர்வலம் நடத்த ......
அவளது முகம் மருதாணி பூசிக்கொள்ள...... ஆண் மகனின் முதல் தொடுகையில் கிறங்கி நின்றாள்.
கதிர்ர்ர்.......
ம்ம்ம்...... என்று அவன் அவளது மென்மையில் மூழ்கிக் கொண்டே சொல்ல......
தீடீரென்று யாரோ கதவை தட்ட .....
இருவரது மோன நிலையும் கலைந்தது. கதிர் பதட்டத்தில் பக்கத்திலிருந்த பாத்திரத்தை தட்டிவிட.....
வெக்கத்திலிருந்தவள் அவன் செய்கையைக் கண்டு பக்கென்று சிரித்து விட்டாள்.
சிரித்தபடியே சென்று கதவை திறந்தாள்.
பக்கத்திலிருந்த வீட்டின் பெண்மணி, என்ன பிரியா எப்புடி இருக்க..... கல்யாணம் ஆகிடுச்சாமா எங்கிட்ட சொல்லவே இல்ல பார்த்தியா.....
ஐயோ ஆண்டி உள்ள வாங்க......
அவர் உள்ளே நுழைந்ததும் அமர வைத்தவள். நீங்க எப்புடி இருக்கிங்க ஆண்ட்டி. உங்ககிட்ட சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா நீங்க ஊரிலேயே இல்லையே ஆண்ட்டி.
ஆமாடா லலிதாவுக்கு இரண்டாவது குழந்தை பொறந்துருச்சு அதான் போயிட்டேன்.
Own house own company irukku but bathroom illayame
Thank you.
Unga ny happy series na sollunga ji vaaren...illana right about turn
????????????