அய்யோ பிரியா நான் இப்பதான்டா காஃபி குடிச்சேன். கண்ட நேரத்துல சாப்பிட்டா ஆகாதுடா உடம்புக்கு....
என்ன ஆண்ட்டி வீட்டுக்கு வந்துட்டு ஒன்னுமே சாப்புடாம போனா நல்லாருக்கா உங்களுக்கு.
நீ கேட்டதே போதும் பிரியா கொஞ்சம் தண்ணி மட்டும் குடுடா....
சரிங்க ஆண்ட்டி என்று அவள் தண்ணி கொடுக்க.....
சிறிது நேரம் பேசிவிட்டு இருவரிடமும் விடைபெற்றார் அந்த பெண்மணி.
அவரை அனுப்பிவிட்டு கதவை சாத்தியவள்.
கதிர் அருகில் வந்து, சரியான டமாரம் இந்த லேடி. வந்து விசாரிக்கிற மாறி விசாரிச்சிட்டு போய் ஊரே சொல்லிட்டு இருக்கும். இந்த மாதிரி லேடி கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா பேசணும் கதிர்.
அவள் பேசியதை கேட்டவன். ஆம் என்பது போல் தலையினை மட்டும் ஆட்டினான்.
சரி வாங்க கதிர் சாப்பிடுவோம் ரொம்ப பசிக்கிது.
இதோ டூ மினிட்ஸ் தர்ஷீ வந்துடுறே இருங்க.
என்ன நீங்களே சாப்பாடு போட போறிங்களா.... ஆல்ரெடி உங்கள சமைக்க வச்சே கொடும படுத்திட்டேன். சாப்பாடு போட வச்சா எங்க அம்மாவே என்ன வந்து அடி பின்னிருவாங்க. நீங்க இருங்க கதிர் நான் போய் எடுத்துட்டு வரேன்.
எனக்கு இதுல எந்த கஷ்டமும் இல்ல தர்ஷீ. பொண்ணுங்க மட்டும்தான் இதெல்லாம் செய்யனுமா..... ஏன் பசங்க செஞ்சா கொறஞ்சிடுவமாங்க ...... இன்னைக்கு என் கையால தான் உங்களுக்கு சாப்பாடு இருங்க வரேன்.
அவன் சென்றவுடன். கதிர் நீங்க எனக்கு ஒவ்வொரு செய்கையிலயும் புதுசா தெரியுறிங்க. உங்ககூட பல நாள் வாழ்ந்த மாறி ஃபீல் லா இருக்கு. உண்மையாவே நீங்க எனக்கு கிடைச்ச வரம்தான். ஐ லைக் யூ சோ...... மச்...... என்று மனதளவில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அவன் உணவு பதார்த்தங்களை எடுத்து உணவு மேசையில் வைத்து அவளுக்காக ஒரு தட்டை எடுத்து சாப்பாடு போட்டு அதில் கொஞ்சம் குழம்பு ஊற்றி உருளைகிழங்கு பொறியலையும் வைத்தான்.
அவன் செயலையும் அவனையும் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்(பார்க்குற மாறி இல்லயே சைட் அடிக்கிற மாறி தான் இருக்கு😜😜)
அவளுக்கு உணவை தயார் செய்தவன் அவளை நோக்க, அவள் அதே நிலையிலே
Own house own company irukku but bathroom illayame
Thank you.
Unga ny happy series na sollunga ji vaaren...illana right about turn
????????????