அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க கதிர் மாசம் 1,000 ரூபாய் மட்டும் நீங்க கொடுத்தா போதும் மிச்சத்தை நான் போட்டு லோன் கட்டிக்கிறேன்.
தர்ஷீ அது வேணாம்ங்க சரிப்பட்டு வராது.
கதிர் நான் உங்க ஒயிஃவ் தான நீங்க சம்பாரிக்கிறத நான் யூஸ் பண்ணலாம். நான் சம்பாரிக்கிறத நீங்க யூஸ் பண்ண மாட்டிங்களா இது என்ன லாஜிக் கதிர். நான் என்ன என்னோட சொத்துல இருந்தா தரேன்னு சொல்றேன். ஒரு வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேர் வேலைக்கு போனா ரெண்டு பேரோட சம்பளம் சேர்த்து தான் பிளான் பண்ணுவாங்க கதிர். ஒரு வேல நீங்க என்ன உங்க வீட்ல ஒரு ஆளாக்கூட பார்க்கலயோ.....புரிஞ்சிரிச்சு கதிர். எல்லாமே புரிஞ்சிரிச்சு ஓகே விடுங்க. நான் தனியாள் தான...... என்று அவனிடம் கோபமாக போவது போல் பேசிவிட்டு ரூமிற்கு சென்று கட்டிலில் ஒரு ஓரமாக படுத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
தர்ஷீ நான் அப்புடி சொல்லைங்க என்ன தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க... என்று அவள் பின்னே அவனும் அவள் அறைக்கு வர, தர்ஷீ....... என்னங்க.......
கொஞ்சம் கதவ சாத்தி,லைட் ஆஃப் பண்றிங்களா கதிர். எனக்கு தூக்கம் வருது.
அவனும் கதவை சாத்தி, லைட் ஆஃப் பண்ண......
அய்யோ கதிர் ரொம்ப இருட்டா இருக்கு. நைட் லாம்ப் போடுங்க.
இருங்க.... இருங்க போடுறேன். என்று அவன் அனைத்து ஸ்விட்சையும் போட்டு பார்த்து ஒரு வழியாக கண்டு பிடித்துவிட்டான் நைட் லாம்ப் ஸ்விட்சை.
வந்து படுங்க கதிர் என்று கூறிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.
ஒரு ஓரமாக அவளை பார்த்தபடியே படுத்தவன்.
தர்ஷீ..... என்னங்க.....
எனக்கு துாக்கம் வருது கதிர் என்று அவள் திரும்பாமலே கூற,
கோவமாங்க....
இல்ல.....
இல்ல நீங்க கோவமாத்தான் இருக்கிங்க.... நான் அந்த அர்த்ததுல சொல்லவரலங்க... நீங்க தப்பா....
என்று அவன் கூறும்போதே.....
அவள் போர்வை எடுத்து முகத்தை மூடிக்கொண்டாள். ஏனென்றால் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயை இருக்கையால் மூடி சத்தமில்லாமல் சிரித்தாள்.
கதிர் பாவமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
தொடரும்
Next episode will be published on 2nd Mar. This series is updated weekly on Tuesdays.