அப்படியா ஆண்ட்டி..... சரி சரி...லலிதா இப்ப நல்லாருக்காளா ஆண்ட்டி.
இப்ப நல்லாருக்கா பிரியா. ஆமா நீ ஏன் திடுதிப்புனு கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்க கிட்ட கூட சொல்லலையே....
அது ஒரு பெரிய கதை ஆண்ட்டி. அப்பா சொந்தக்காரங்க வந்து அவங்க சொந்தத்துல கட்டி வைக்கிறேன் என்று சொல்லி ஒரே ஆர்பாட்டம். அப்புறம் தான் எங்க அம்மாவே எனக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது. எங்க அம்மா சொந்தக்காரங்க தான் ஆன்ட்டி. அவரே வந்து நான் தான் அபிராமி அத்த பார்த்த மாப்பிள்ளனு சொல்லி எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்து அடுத்த நாளே கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ஆன்ட்டி யார்கிட்டயும் சொல்லலை.
ஓ..... இவ்வளவு விஷயம் நடந்திருக்குதா.....
ஆமா ஆன்ட்டி கொஞ்சம் இருங்க......
கதிர்..... கதிர்..... இங்க கொஞ்சம் வாங்களேன்.
கதிர் சமையலறையில் இருந்து வர....
தர்ஷினி எழுந்து போய் அவன் கையை கோர்த்து கூட்டி வந்தாள்.
இவர்தான் ஆண்ட்டி என்னோட ஹஸ்பெண்ட். என்று அவள் சிரித்த முகமாக கூற .....
கதிரும் அவள் நெருக்கத்தில் நெளிந்தபடியே சிரித்து வைத்தான்.
ம்ம் ..... பரவாலயே கல்யாணம் ஆன ஒரு நாளுலயே சமையல் செய்ய வச்சிட்டியே .... அங்கிள் தான் இருக்காரு பாரு குடிச்ச டீ டம்ளர கூட எடுக்க மாட்டாரு.
அச்சோ ஆண்ட்டி நான் இவர சமைக்க சொல்லல. நான் தூங்கிட்டு இருக்கப்ப இவரே செஞ்சிட்டு இருக்காரு.
பரவால டிம்மா ஆம்பிள புள்ளங்க இப்படிதா பொறுப்பா இருக்கனும்.
இவர்கள் பேச்சுக்கு இடையில் கதிர் தான் விழிபிதுங்கி அமர்ந்திருந்தான்.
ஏனென்றால் கதிர் தோள் மேல் ஒரு கையை போட்டபடி அவள் நிற்க, அவன் அமர்ந்திருந்தான்.
நீங்க என்ன பண்றிங்க தம்பி.....
நான் CNC .......
CNC கம்பேனி வச்சிருக்காரு ஆண்ட்டி .....
பரவாலயே உங்க அம்மா நல்ல மாப்பிள்ளை தான் பாத்துருக்கா.....
ஆமா ஆண்ட்டி. சாப்புடுங்க ஆண்ட்டி நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் பாருங்க.