ம்ம்.... ஒரு இரண்டாயிரம் இரண்டாயிரத்தி ஐநூறு.
அவன் அழகாக சிரித்தப்படியே ஆனா எங்க வீட்ல அரிசிக்கு 0 தான் செலவாகும்.
வாட்....
எஸ் தர்ஷீ. ரேஷன் கடைல ஃபீரியா அரிசி தராங்கல்ல அதுலதான் எங்க வண்டி ஓடுது. எங்க ரேஷன் கார்டு, ரெண்டு அண்ணாவோட ரேஷன் கார்டு, அக்கா, தங்கச்சி ரெண்டு பேரோட ரேஷன் கார்டு எல்லாமே எங்க அம்மாகிட்ட தான் இருக்கும். அஞ்சு ரேஷன் கார்டுல ஐம்பது கிலோ அரிசி வாங்கிருவாங்க. பருப்பு, எண்ணெய், பச்சரிசி, உளுந்து இது மாறி ரேஷன் கடையில் கிடைக்கிற பொருள் கம்மி விலையில் வாங்கி வச்சுக்குவோம். மளிகை கடையில வாங்க வேண்டியது தேவைக்கு மட்டும் வாங்கி வச்சுப்போம்ங்க. ஆடம்பர செலவு எதுவுமே பண்ண மாட்டோங்க.
அவள் மிகவும் ஆச்சரியமாக அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தாள் இப்படி கூட வாழுறவங்க இருக்காங்களா.
நீங்க எப்ப லாஸ்ட்டா ட்ரஸ் எடுத்திங்க.
போன மாசம் ரெண்டு புடவை எடுத்தேன் கதிர்.
ஆனா நாங்க தீபாவளிக்கு மட்டும்தான் ட்ரெஸ் எடுப்போம். அதுவும் கம்மி விலையா தான் இருக்கும் தர்ஷீ.
சிக்கனமும்னு பார்த்தா எங்க அம்மா கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம். மாச கடைசியில வீட்ல சில பொருள் இல்லனா பக்கத்தில இருந்து கடன் வாங்கி அந்த நாளையே ஓட்டிருவாங்க.
என்னோட சம்பளம் வாங்கவும் வீட்டு செலவை பார்க்கவும் சரியா போய்டும். அக்கா, தங்கச்சி கல்யாணத்துக்கு மட்டும் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன். ரெண்டு பேருக்கும் அஞ்சு அஞ்சு பவுன் போட்டு தான் கட்டி குடுத்தோம். சொந்தம் அதுனால அவுங்களும் எதுவும் எதிர் பார்க்கல. ரெண்டு அண்ணனுக்கும் பொண்ணு வீட்டிலேயே செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அவங்க போட்டுட்டு வந்த நகையும் வீட்டு கஷ்டத்திற்காக அடமானம் வச்சுட்டாங்க.
ஏன் கதிர் உங்க வீட்ல வேற யாரும் வேலைக்கு போகல. நீங்க முன்னாடியே சொல்லி இருந்தீங்க அண்ணா படிக்கல அப்படின்னு. ஆனா படிக்காதவங்க வேலை செய்யாம யாரும் இல்லையே கதிர்.
அவளை மெச்சும் ஒரு பார்வை பார்த்தவன். இதை பத்தி பேசதாங்க உங்களை இங்க கூட்டிட்டு வந்தேன்.
Own house own company irukku but bathroom illayame
Thank you.
Unga ny happy series na sollunga ji vaaren...illana right about turn
????????????