கொடுத்திருந்தாங்க” – சனா கையில் இருந்த தடிமனான போல்டரை ஆயுஷிடம் கொடுத்தாள்.
“என்ன இது?” – ஆயுஷ் போல்டரை கையில் வாங்கிக் கொண்டான்.
“இதுல என்ன இருக்குன்னு அம்மு உன் கிட்ட சொல்லலையா சனா?” – ராதா.
“சொன்னாங்க ஆன்ட்டி. அமுதவள்ளி உங்க ராஜ்பால் இண்டஸ்ட்ரீஸ்க்கு தற்காலிக டைரக்டரா இருந்தாங்க. ஆயுஷ்க்கு அந்த பதவியை கொடுக்குறது தான் அவங்க திட்டம். அதை இப்போ ப்ரோசீஜர் படி செய்தாச்சு. அதுக்கான பேப்பர்ஸ் இது. என் கிட்ட பத்திரமா வச்சசிருந்து ஆயுஷ் வந்தப்புறம் உங்க கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தாங்க.” – சனா.
சனா உங்க என்று சுட்டிக் காட்டி பேசியது ராதாவின் மனதை குத்தியது. புதிதாக அறிமுகமாகி இருக்கும் சனாவை நம்பி அமுதவள்ளி அந்த பேப்பர்களை கொடுத்திருப்பது அவளின் குற்ற உணர்வையும் அதிகமாக்கியது.
பேப்பர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆயுஷிற்கும் அதே உணர்வு தான். பேப்பர்களை சரி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கூட அவனுக்கு ஏற்படவில்லை.
“அம்மு எங்கே போறேன்னு சொன்னாம்மா?” – ராதாவிடம் முதல் தடவையாக அக்கறையுடன் விசாரித்தான்.
“எதுவும் சொல்லலை ஆயுஷ். உன்னை அவளால தான் அரெஸ்ட் செய்தாங்கன்னு ரொம்ப கோபமா அவக் கிட்ட பேசிட்டேன். எதுவும் சொல்லாம போனா. நீ ரிலீஸ் ஆகப் போற செய்தி கூட வக்கீல் தான் சொன்னார். அவ போன் கூட செய்யலை. எனக்கென்னவோ பயமா இருக்கு”
“நீங்க பயப்பட எதுவுமில்லை ஆன்ட்டி. அமுதவள்ளி ஸ்மார்ட் மட்டும் கிடையாது ஸ்ட்ராங் பர்சனும் கூட. ஆயுஷ் சம்மந்தமா யாரையாவது பார்க்க போயிருப்பாங்க. உனக்கு அது யாரா இருக்கும்ன்னு தெரியுமா ஆயுஷ்?” – சனா.
“பிரணயா இருக்கலாமோ?” – ஆயுஷ் மொபைலில் பிரணயை தொடர்புக் கொள்ள முயற்சி செய்தான். ரிங் ஆனதே தவிர பிரணய் அழைப்பை ஏற்கவில்லை!
“இதெல்லாம் சின்னதுல எடுத்த படம்” – விஜித்ரா பானுமதியிடம் காட்டிக் கொண்டிருந்த படங்களை ஆர்வத்துடன் பார்த்தாள் அமுதவள்ளி. அந்த படத்தில் கதிர் வாயில் லாலிபாப் சப்பிக் கொண்டிருந்தான்.
“அப்போ இருந்தே அவனுக்கு சாப்பாட்டுல தான் ஆர்வம்” – பானுமதி சொல்லவும், அனைவரும் சிரித்தார்கள். அமுதவள்ளியும் சிரித்தாள்.
“என்னம்மா என்னைப் பத்தி என்ன கதை அடிச்சு சிரிச்சுட்டு இருக்கீங்க?” - கதிர் பாசிப்படிந்த அந்த படிகளில் காலியாக இருந்த அமுதவள்ளியின் பக்கம் உட்கார்ந்தான். அவனின் கால் மிகவும் லேசாக அமுதவள்ளியின் காலில் பட்டு உரசியது. யோசிக்க ஒரு வினாடி கூட
cool and interesting update ma'am 👏👏👏👏👏👏 ayush thirundhitara
look forward to read the next update.w
Thank you.
cool and interesting update ma'am 👏👏👏👏👏👏 ayush thirundhitara
look forward to read the next update.
Thank you.