ஈரோடு!
மஞ்சளுக்கு பெயர் போன ஈரோட்டில், புகழ் பெற்ற அந்த பெரிய திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது.
அதிகாலை முகூர்த்தம் என்பதால் விடியலுக்கு முன்பே பரபரப்பாக மக்கள் அந்த மண்டபத்திற்கு படையெடுக்க ஆரம்பித்திருந்தனர்.
வித விதமான ஆடைகளை நெய்து இருந்த அந்த சுற்றுப்புற மக்கள் தங்களுக்கு பிடித்தமான ஒரு ஆடையை நெய்து அணிந்து கொள்ள நேரமில்லாமல், வெளியில் வாங்கி பெட்டியில் மடித்து வைத்திருந்த பட்டுப் புடவையை எடுத்து பகட்டாக அணிந்து கொண்டு வந்திருந்தனர்.
ஒவ்வொருவர் பார்வையும் திருமண மேடையை கவனிக்காமல், அதை விடுத்து மற்றவர்கள் எந்த மாதிரி உடுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள், என்ன கலர் புடவை, என்ன மாதிரி நகைகள் அணிந்து வந்திருக்கிறார்கள் என்று அளவெடுத்து கொண்டிருந்தன.
திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக சந்திரசேகர் மற்றும் ராஜாம்பாள் வரவேற்பு பகுதியில் நின்று கொண்டு இரு கரம் குவித்து அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று கொண்டிருந்தனர்.
எல்லோர் மனதிலும், முகத்திலும் சின்னதும் பெரியதுமாய் புன்னகை பூத்திருக்க சந்திரசேகர் முகத்திலோ முகம் கொள்ளா பூரிப்பு, மனம் கொள்ளா சந்தோஷம்...
எப்படியோ இறுதியில் தான் நினைத்தது நடந்து விட்டது என்று பூரித்தவர், தன் மகனிடம் செய்த சபதத்தில் வெற்றி பெற்றவர் அதே வெற்றிக் களிப்பில் வருபவர்கள் அனைவரையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும் திருமணத்திற்கே உரித்தான மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க, அந்த மண மேடையில், அந்த திருமண விழாவின் நாயகனாக வீற்றிருந்தான் விஷ்வேஷ் சந்திரசேகர்.
இருபத்து ஐந்து வயது தான் என்றாலும் தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கேறிய உடற்கட்டும், பரந்து விரிந்த மார்பும், இறுகிய தசைகளும், சிக்ஸ் பேக் வயிறும் என கம்பீரமாய் அந்த மண மேடையில் வீற்றிருந்தான்.
பட்டு வேஷ்டி சட்டையில் இன்னுமே கம்பீரமாய், பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும் ஆணழகனாய், அந்த மேடையில் அமர்ந்து இருந்தான் விஷ்வா.
உடல் மொழியில் தெரிந்த கம்பீரம் முகத்தில் இல்லை. அவன் முகத்திலோ கல்யாண மாப்பிள்ளைக்கு உரிய அடையாளங்கள் எதுவும் இல்லாமல், முகம் கடுகடுவென சிவந்து போயிருந்தது.
எண்ணெய் இல்லாமலேயே போட்டால் கடுகு பொரிந்திருக்கும் அவன் முகத்தில்.
Ha ha paaati ponnu kizhi madrnu solli katti vachu drama tananu etividrungala
Undra peran pondatiya kandukama vida pora avasthai padivugal ama
Paavam anda paingizhi