This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“இன்னைக்கே அந்த ட்ரோன் தேடி இருந்திருக்கலாம் சக்தி. எதுக்கு நாளைக்கு போகலாம்னு சொன்ன?” – சக்தி ஜீப்பை கிளப்பிய உடனேயே மனதில் இருந்த கேள்வியைக் கேட்டாள் சத்யா.
“ட்ரோனை மறைச்சு வச்சிருக்கவங்க நாம தேடப் போற இடத்துல அதை கொண்டு போய் வைக்க டைம் கொடுக்கனும்ல சத்யா பாஸ்” – சக்தி அதிசயத்திலும் அதிசயமாக குறும்பு மின்ன பதில் சொன்னாள்.
“என்ன?” – சத்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
“இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எதாவது விஷயத்தை ஈஸியா விடுவாரா பாஸ்? அவரு திருவிழா நடந்த இடத்துக்கு பக்கத்துல இருந்த காடு தொடங்கி இங்கே இருக்க எஸ்டேட் வரைக்கும் ஆளுங்கள வச்சு மட்டுமில்லை, தெர்மல் இமேஜ் டெக்னாலஜி, ஆப்டிகல் செக்ஷனிங்ன்னு ஹெலிகாப்டர் வச்சும் தேடி பார்த்துட்டார். எதுவும் கிடைக்கலை! நாம தேடினா மட்டும் எப்படி கிடைக்கும்? யாராவது நமக்காக வச்சா தான் கிடைக்கும்!” – சக்தி.
“புரியலை சக்தி. ஏன் நீ அந்த வீட்டுல இருக்கவங்க தான் ட்ரோன் வச்சிருக்கனும்னு நினைக்குற? வினாயக்கே கூட செய்திருக்கலாம். வேற தர்ட் பெர்சன் யாராவதா கூட இருக்கலாம்?” – சத்யா.
“வினாயக் கல்ப்ரிட் இலலை சத்யா. காமன் சென்ஸ் யூஸ் செய்து யோசிச்சுப் பாரேன்! வினாயக் சந்திரமௌலி நடுவே இருக்க பிரச்சனைக்கு பெரிய ஹிஸ்டரி இருக்கு. அது எல்லாமே சென்னையில நடந்தது. அப்போ எல்லாம் கோபப்படாம, சந்திரமௌலியை ஹர்ட் செய்யாம இருந்த வினாயக் இங்கே வந்த உடனே ஷூட் செய்வாரா? வினாயக் இங்கே வந்து எவ்வளவு நாள் ஆச்சு? இதுல வேலை மெனக்கெட்டு சந்திரமௌலியை இங்கே வரச் சொல்லி வேற சாகடிப்பாரா? டஸ்ன்ட் மேக் எனி சென்ஸ்.”
“அப்போ வினாயக் மேல பழி போடுறதுக்காக யாரோ இதை செய்றாங்க. யாரு அது? கலைவாணிக்கு ப்ரியம்வதா வினாயக்கை லவ் செய்றது பிடிக்கலை. ஆனால் அதுக்காக ட்ரோன், கொலைன்னு எல்லாம் போவாங்களா? அதெல்லாம் செய்ற டேலன்ட் அவங்களுக்கு இருக்கா?”
“அவங்களுக்கு ஹெல்ப் செய்ய ஒருத்தங்க இருந்தா செய்ய முடியாதா?”
“ஒ! அப்போ பாஸிபிள் தான்! ராகுல், ஐஸ்வர்யா, ஸ்ரீனிவாஸ் யார் வேணா செய்திருக்கலாம்.”
“ப்ரியம்வதாவை விட்டுட்டீயே?”
“சக்தி? பாவம் அந்தப் பொண்ணு. ஏற்கனவே நாம வினாயக்குக்கு ஹெல்ப் செய்யாம ட்ரோன் கண்டுப்பிடிச்சா வினாயக் மேல இருக்க குற்றம் உறுதி ஆயிடும்னு சொல்லிட்டு இருக்குறதுல முழுசா குழம்பிப் போய் இருக்கா!”
Oru velai indha CM-a vadham seithadhu priyamvadha va irupangalonu rombha naal oru doubt...appadi mattum sketch pottutadhinga ji
Sd and sakthi moment was cool 😍😍 indha series layavdhu jodi seruvangala
No comments on Mr and Mrs then oda loves 😁😁😍😍😍 lovely couple!!! Sathya oda attitude was super cute 🏃🏃🏃 nalla oda vitinga
Srinivas or priya ??? Or andha veetula velai pakura yaravdhu???
Thank you and keep rocking.