This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளே காரணமாக அமைகிறது. எல்லோருக்கும் இது பொருந்துமோ இல்லையோ ஜெய் விஷயத்தில் இது சரியாகி விட்டது!
ஜெய் நினைத்திருந்தால் உடலுக்கு கடின உழைப்பு கொடுக்கும் தோட்ட வேலையை ஏற்றுக் கொள்ளாமல் பாங்க் லோன் வாங்கி படித்திருந்திருக்கலாம். பொறுப்பில்லாமல் இருக்கும் அவனின் பெற்றோரை வற்புறுத்தி அவனின் படிப்புக்கு பணம் கேட்டிருந்திருக்கலாம். ஆனால் ஜெய் அப்படிப்பட்டவன் இல்லை. கடன் வாங்குவதை விட உழைத்து படிப்பது எந்த விதத்திலும் தாழ்ந்து போனது இல்லை என்பது அவனின் திடமான நம்பிக்கை.
அதேப்போல அவனின் சொந்த உழைப்பினால் பெறும் கல்வி அவனுக்கு தன்னம்பிக்கையும் அதிகமான உத்வேகத்தையும் கொடுத்திருந்தது. இதனால் நன்மைகளுடன் எதிர்பாராத தீமைகளும் வந்து சேர்ந்தது!
ஜெய்யை முதல் முதல் சித்ரா சந்தித்தது நினைவில் வைத்துக் கொள்ள கூடிய நிகழ்ச்சி இல்லை.
அவர்கள் வீடு இருந்த சாலையின் நடுவே ஒருவனை அடித்து உதைத்துக் கொண்டிருந்தான் ஜெய். சாலையில் நின்றிருந்த சிலர் வேடிக்கைப் பார்த்தார்களே தவிர எதுவும் கேட்கவில்லை. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரேஷால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. ஜெயை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.
“எதுக்கு இவனை இப்படி அடிச்சுட்டு இருக்க? விடு அவனை, விடுன்னு சொல்றேன்ல!” – ஜெயிடம் இருந்து அடி வாங்கி கொண்டிருந்தவனை விலக்க முயற்சி செய்தார்.
கணவரின் கார் வந்த சத்தம் கேட்டு வாசல் வந்த சித்ரா அவரின் சட்டையை ஒரு இளைஞன் பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டுப் போனாள். ஓடாத குறையாக அங்கே சென்றாள். ஜெய் எதையும் எவரையும் பார்க்காமல் திட்டிக் கொண்டிருந்தான்.
“- - - அவன் என்ன செய்தான்னு உங்களுக்குத் தெரியுமா? ரோட்டுல போன ஸ்கூல் பொண்ணுங்க கிட்ட அசிங்கமா கமன்ட் அடிச்சுட்டு இருந்தான். அவனுக்கு போய் வக்காலத்து வாங்குறீங்க.” – சித்ரா பக்கத்தில் வந்தப் பிறகே சூழ்நிலை உணர்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். அவனின் கை சுரேஷின் சட்டையை விடுவித்தது.
“சாரி சார். அவன் பேசினதை நீங்க கேட்கலை. அதான் உங்களுக்கு தெரியலை. எவ்வளவு கொழுப்பு இருந்தா குழந்தைகளை பார்த்து அப்படி பேசுவான்” – ஜெயின் பேச்சில் கோபம் இருந்தது.
சுரேஷ் எப்போதும் போல தன் குரலை உயர்த்தாமல் ஜெய் சொல்வதை உணர்ந்துக் கொண்டு
Suresh uncle and athai buvi kaga yosipadhum, seyal paduvadhum superb
Interesting update ma'am 👏👏👏👏👏👏 look forward to read the next update.
Thank you.