அமிர்தவர்ஷினி:
கள்ளம் கபடமற்ற வெள்ளந்தியான மனம் படைத்த கிராமத்து வெகுளிப்பெண்.
வர்ஷினி என்றால் மழையாக பொழிபவள் என்ற அர்த்தமாம்.
அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடினால் மழை பெய்யுமாம். ஆனால் அந்த ராகத்தை பாடாமலே அவள் பெயருக்கு ஏற்றார் போல கொட்டும் மழையாக பொழிந்து தள்ளி விடுவாள் தன் பேச்சால்.
அந்த மழை கூட சற்று நேரம் கொட்டி தீர்த்து விட்டு ஓய்ந்து விடும். ஆனால் இந்த வர்ஷினி புள்ள பேச ஆரம்பித்தால் அவ்வளவு எளிதாக நிறுத்தி விட மாட்டாள்.
இடி, மின்னல், மழை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் கச்சேரியே நடத்தி விடுவாள் அவள் இருக்கும் இடத்தில்.
ஆனாலும் சில நேரம் அவளின் கள்ளம் கபடம் இல்லாத வெகுளித்தனமான பேச்சால், மற்றவர்கள் மனதில் இருக்கும் கவலை மறந்து போய் ஆனந்த மழையையும் பொழிய செய்து விடுவாள் அமிர்தவர்ஷினி
அவள் பிறக்கும் பொழுதே பிரசவத்தில் சிக்கலாகி அவள் அன்னை இறந்து விட, அவள் அப்பத்தா மாரியம்மாள் தான் அவளை வளர்த்தார்.
தாயில்லா புள்ளை, அவளுக்கு பசியை வெளியில் சொல்ல தெரியாது... அதனால் அவளை பசி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவள் அப்பத்தா மாரியம்மாள், தன் பேத்திக்கு வஞ்சனை இல்லாமல் வயிற்றுக்கு தள்ளி எப்பொழுதும் அவளை பசி என்ற ஒன்றை அறியாமல் வளர்த்தார்.
அதனாலயே சற்று பூசினாற் போன்ற தேகம். சிறு வயதிலயே அவளின் கன்னங்கள் குண்டு குண்டாய், பார்ப்பவர்களை எல்லாம் அந்த குட்டியை தூக்கி கொஞ்ச சொல்லும் அமுல் பேபி அவள்.
பார்ப்பவர்கள் அவள் ஒரு தாயில்லா புள்ளை என்று சொன்னால் நம்பி இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மாரி தனக்கு இல்லை என்றாலும் தன் பேத்திக்கு கொடுத்து வளர்த்து வந்தார்.
அவரின் கவனிப்பாலும், அதிக செல்லத்தாலும் அமிர்தவர்ஷினியும் துறுதுறுவென்று சேட்டை செய்பவளாக, யாருக்கும் அடங்காத சுட்டி பெண்ணாக வளர்ந்து நின்றாள்.
நிறம்... மாநிறம்தான்... அவள் நிறத்தை பார்த்துவிட்டு அவளை கண்டு கொள்ளாத விடலை பசங்க, அவளின் பருவத்திற்கே உரித்தான வனப்பும் வளைவு, நெளிவு சுளிவுகளும், அவளை தவிர்த்து சென்றவர்கள் நின்று திரும்பி பார்க்க வைக்கும் உடல் வாகு.
வெள்ளந்தியாய் எல்லாருடனும் சிரித்து கலகலப்பாக பேசுகிறாள் என்று அவள் அருகில்