அதற்குள் உணர்வு பெற்ற ஜனா, சொல்லு ஸ்வேதா, வீடு தேடி வந்திருக்க... ஏதாவது முக்கியமான விஷயமா என்றான்.
உடனே தனது ஹேண்ட் பேக்கை திறந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினாள்.
எனக்கு திருமணம் ஜனா... நீங்கள் வரவேண்டும் என்பதை சற்று தடுமாற்றமாகவே சொல்லி முடித்தாள்.
எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் வாங்கிக் கொண்ட ஜனா, கண்டிப்பா ஸ்வேதா.. நான் நிச்சயம் வருகிறேன்... இல்லை வருகிறோம் என்றவன் ஹேப்பி மேரீட் லைப் அன்ட் ப்ரைட்புல் ப்யூச்சர் என்று அவளை வாழ்த்தினான்.
அவனது வார்த்தையில் ஒரு தெளிவும் உண்மையான மகிழ்ச்சியும் கலந்திருந்தது அங்கிருந்த அனைவருக்குமே தெரிந்தது.
ஆனால் ஏனோ அஸ்விட்க்கு அவள் அங்கு வந்தது பிடிக்கவில்லை என்பது அவனது முகத்திலேயே தெரிந்தது.
அவனுக்கோ அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. அதனால் ஸ்வீனாவை அழைத்து வருகிறேன் என்று அறைகுறையாக சொன்னான்.
நீ போய்ட்டு வா... என்று சொல்ல அஸ்விட் தனுவையும் அழைத்து செல்வதாக சொல்ல ஒரு ஐந்து நிமிடம் இருங்க... இதோ அழைத்து வருகிறேன் என்ற ஜனனி தனது அறைக்கு அழைத்துக்கொண்டு சென்றாள். சரியாக ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த தனுவை அழகாக தயார் செய்திருந்தால் ஜனனி.
ஜனனியிடம் இருந்து தனுவை வாங்கிக்கொண்ட அஸ்விட் அனைவரிடமும் சிறு தலையசைப்புடன் விடை பெற்று கொண்டான்.
தனு சிரிப்புடன் விடை பெற்றுக்கொண்டதோடு விடாமல் ஜனனியை தோளோடு கட்டி அணைத்துக் கொண்டு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பாய் டாட்... பாய் மாம்... பாய் ஆன்ட்டி என்றவாறு அஸ்வினுடன் உற்சாகத்துடன் கடந்து சென்றாள்.
இவை அனைத்தையும் ஸ்வேதா பார்த்துக்கொண்டே அமர்ந்து இருந்தாள். ஜனனி எதிராக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அடுத்ததாக என்ன பேசுவது என்று தெரியாமல் ஸ்வேதா ஜனனியின் முகத்தையும் ஜனாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க அவள் மனநிலையை உணர்ந்த ஜனனி ஜனாவை நேருக்கு நேர் பார்த்தாள்.
அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்று உணர விரும்பி பார்த்தவள் அவன் முகத்தில் தெரிந்த மெல்லிய புன்னகையை பார்த்ததும் ஆபிஸ் கிளம்ப டைம் ஆகுது.... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க பேசிக்கிட்டு இருங்க என்றவள் அங்கிருந்து கடந்து சென்று கிச்சனுக்குள்