(Reading time: 5 - 10 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

 

       “அடடே!...ரொம்ப நேரமாயிடுச்சு போலிருக்கே!...இப்ப மணி எவ்வளவு இருக்கும்?” திரும்பி தலையணைக்கு அருகில் இருந்த டைம்பீஸைப் பார்த்தான்

 

       அது 11.45 என்று காட்ட

 

       “அய்யய்யோ...பனிரெண்டாகப் போகுதே...இப்ப எப்படிக் கீழே போறது?..நான் பாட்டுக்கு இருட்டுல போய் எதையாச்சும் தட்டி விட்டு சத்தம் பண்ணிட்டா...அப்பா முழிச்சிடுவாரே.” என்று யோசித்தவன்

       “சரி...பேசாம இங்கியே தூங்கிட வேண்டியதுதான்!” என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு அப்படியே பாயில் படுத்தான்.

       நீண்ட நேரம் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் படுத்த ஐந்தாவது நிமிடம் தூங்கிப் போனான்.

       மணி சரியாக 12.00

       வானில் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்த் தேய்பிறை நிலவு, ஏனோ மேகங்களுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.  எங்கோ தூரத்தில் ஒரு நாய் எதையோ கண்டு பயந்து ஹீனக் குரலில் கத்தி தன் அச்சத்தை வெளிப்படுத்தியது. 

       தெரு விளக்குகள் திடீரென்று அணைந்து அணைந்து எரிய ஆரம்பித்தன.  யாரோ வேக வேகமாய் மூச்சு விடும் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

       ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடந்த முகிலன் போர்த்தியிருந்த போர்வையை அவன் கால் பகுதியில் பற்றி யாரோ வேகமாய் இழுத்துத் தூரத்தில் எறிய

       திடுக்கிட்டுக் கண் விழித்தான்.

       “என்னது?...யாரோ போர்வையைப் பிடித்து இழுத்த மாதிரியிருந்தது...போர்வை வேற தூரப் போய்க் கிடக்கு?”  படுத்தவாறே தலையைச் சுற்றும் முற்றும் திருப்பி யாராவது இருக்கிறார்களா? என்று தேடினான்.

       “யாருமே இல்லையே!...ஒரு வேளை காற்று வேகமாய் அடிச்சதுல தெறிச்சுப் போய் விழுந்திருக்குமா?...இருக்கும்...இருக்கும்” என்று நினைத்தவாறே எழுந்து சென்று அந்தப் போர்வையை எடுத்துக் கொண்டு வந்தவன் திரும்பவும் படுத்து போர்வையால் முக்காடிட்டு உறங்கலானான்.

       அவன் உறக்கத்தின் ஆழத்திற்குப் போன மறு நிமிடம் மறுபடியும் அதே போல் கால்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.