மாயா எண்ணெயில் வற்றலை போட்டு பொரித்தெடுப்பதை பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிற்கு தானாக மாலையில் ‘அவள்’ அவனிடம் பொரிந்து தள்ளியது நினைவில் வந்தது...
அப்பப்பா என்ன கோபம், என்ன வேகம்... மூச்சு விடாமல் இப்படி பேசுகிறாளே கஷ்டமாக இருக்காதா? விட்டால் பேசிக் கொண்டே இருப்பாள் போலிருக்கிறதே... அவள் முழு பெயர் இன்னமும் தெரியவிலையே... சுஹா.... இது எந்த பெயரின் சுருக்கம்? சுஹாசினியாக இருக்குமோ???
சுள்ளென்று வந்து தெரித்த வார்த்தைகளும்... அதற்கேற்ப அவள் கண்ணில் பளிச் பளிச் என்று மின்னிய வெளிச்சமும்... அவளின் பேச்சின் தோரணைக்கு ஏற்ப ஆடிய அவளின் தொங்கட்டான்களும்...
அவள் பேசுவதை பார்த்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு...
ஒரு வார்த்தை பேச வேண்டும் என்றும் தோன்றவில்லை... அவள் அப்படி அவன் பேச வாய்ப்பு கொடுக்கவும் இல்லை!!!
அவள் உலக அழகி இல்லை என்ற போதும் அந்த இதமான அழகே அவனின் மனதை சுண்டி இழுத்திருந்தது...
“என்ன தீபக் என்ன ஆச்சு? கம்பெனியில் ஏதாவது பிரச்சனையா? இவவளவு அமைதியா இருக்க?”
வெங்கட்டின் கேள்வியில் தன்னிலை பெற்ற தீபக், மனதில் இருப்பதை மறைத்து,
“அதெல்லாம் இல்லைப்பா... ஏதோ யோசனை...” என்றான் மழுப்பலாக.
“அப்படி என்ன யோசனை அதை எல்லாம் விட்டு தள்ளு... வா வந்து உங்க அம்மாவிற்கு எல்லாத்தையும் டைனிங் டேபிளில் வைக்க ஹெல்ப் செய்வோம்...”
Thank you.