(Reading time: 9 - 18 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

அவங்களுக்கு நம்பிக்கை இருக்கு.

எப்படித் தெரியும் அவங்களுக்கு,நீயே சொன்னியா ,

திருட்டுத்தனமாக போன் பேசறது, மெனக்கெட்டு கிப்ட் பண்றதுன்னு எல்லாத்தையும் பார்த்துட்டுத் தானே இருந்தாங்க. நான் வேற நீ கொடுத்த சாக்லேட் பேப்பர் எல்லாத்தையும் படுக்கைக்குக் கீழயே பதுக்கி வச்சிருந்தேன். கிளீன் பண்றப்போ பார்த்துட்டு ஏண்டா சாக்லேட்டைத் தின்னுட்டு பேப்பரைக் கொண்டு போய்  போடாமல் இப்படிக் குப்பையாக்கி வச்சிருக்கன்னு கேட்டாங்க.

எனக்கு ரொம்ப முக்கியமானவங்க கொடுத்ததுன்னு சொன்னேன். பேர் என்னன்னு கேட்டாங்க. ரம்யான்னு சொன்னேன். சிரிச்சுட்டே போயிட்டாங்க.

திட்டவேயில்ல?

திட்டல!

ஏண்டா திட்டல? எங்கம்மாவா இருந்தால் அவ்ளோதான்!

எனக்குப் பிடிச்ச எல்லாமே ஆட்டோமேட்டிக்கா எங்க அம்மாக்கும் புடிக்கும். இப்போ எனக்கு உன்னைப் புடிச்சதால் டீபால்டா நீ அவங்களுக்கும் பிடிச்சவளா ஆயிட்ட! அதனால் உன்கிட்ட பேசறதுக்கு என்னைத் திட்ட மாட்டாங்க!

மிகவும் யதார்த்தமாக நடந்து கொள்ளும் தினேஷின் அம்மாவைப் பார்க்காமலேயே ரம்யாவுக்குப் பிடித்துப் போனது. என்றாவது அவர்களை நேரில சந்திக்க வேண்டுமென்று ஆசை கொண்டாள். டேடாபேஸ் லேபில் பவர் பெயிலியர் காரணமாக இரண்டு வாரங்கள் வகுப்புகள் நடக்கவில்லை. எனவே அவர்களின் டேடாபேஸ் சார், இரண்டு பேட்ச்களையும் ஒன்றாகச் சேர்ந்து அந்த ப்ரோக்ராம்களை முடிக்கச் சொல்லியிருந்தார். இருப்பத்தி ஐந்து பேர் இருந்தால் தான் அந்த லேப் அமைதியாக செயல்பட முடியும். மொத்த வகுப்பும் கூடியதால் சலசலவென்று சத்தமாக இருந்தது. ரம்யாவும் ராகதேவியும்  எப்போதும் போல சேர்ந்து கொண்டனர்.  சீக்கிரமே அந்த ப்ரோக்ராம்களை முடித்து விட, மெல்லிய குரலில் அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். உன் வருங்கால கணவன் பெயரை  உன் கைரேகையில் பார்க்க முடியும் தெரியுமா என்ற தேவியிடம், எப்படி என்று மிகுந்த ஆவலுடன் கேட்டாள் ரம்யா. 

தொடர்வேன்

Next episode will be published on 28th Mar. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

6 comments

  • எப்பவுமே இப்படித் தான். பசங்களை அவங்க அம்மா ஈஸியா விட்றாங்க. பொண்ணுங்க அம்மா தான்.. பொண்ணுங்களுக்கு அடிமனசில அம்மா அப்பா பத்தின பயமும் கவலையும் காதலின் தைரியத்தை மீறி உள்ளே இருந்துட்டே தான் இருக்கும்! :sad: நன்றி தோழி!
  • Cool update ma'am 👏👏👏👏👏👏 Ramya avanga parents-i emathuradhu ninaichi guilty ua irundha inga dhinesh semma casual ah suthuraru avanga amma kku theriyumnu 😁😁<br />Pavam avanga parents ivalo excited ah irundha ivanga rendu perum ooru sutha porangale 😈 Adhan yarakanvr aale yarunu therinji pochi ippo peru therinjika ivalo excitement ah 😜 <br />Thank you

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.