படம் முடிந்ததும் சக்தியை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றான் பாரதி, அங்கும் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்துக் கொண்டார்கள். அடுத்து அவளை அழைத்துக் கொண்டு நகைகடைக்கு சென்றான் பாரதி, நகை கடையைக் கண்டதும் அதிர்ந்தாள் சக்தி
”பாரதி இங்க எதுக்கு” என அலற
”ஏன் என்னாச்சி நகை வேணாமா”
”வேணாம்”
”ஏன்“
”என்கிட்ட பணம் இல்லை நான் கொண்டு வரலை”
”என்கிட்ட இருக்கு நீ வா”
”ம்ஹூம்”
“என்ன ம்ஹூம் வா” என கட்டாயமாக அவளின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.
பிரபலமான கடை என்பதால் அனைத்து வகையான நகைகளும் இருந்தது, வெள்ளி தங்கம் பிளாட்டினம் உள்பட அனைத்தும், இதில் கல்யாணத்திற்கான நகைகளும் இருந்தது. இருவரும் கடைக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் நகைகளைக் கண்டு வாய் பிளந்தார்கள். அவர்களை கண்ட அங்கு வேலை செய்யும் கடை பெண்ணோ அன்பாக கைகூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றாள்
அவர்களும் அவள் பின்னாலேயே செல்ல அவர்களை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு
”என்ன நகை வாங்க போறீங்க சார்” என கேட்க அவனோ சட்டென சக்தியைக்காட்டி
”இவளுக்கு நகை வேணும் கொடுங்க” என்றான் அந்த பெண்ணோ சக்தியை ஏற இறங்க பார்த்தாள்.
சக்தியிடம் பெரிதாக நகைகள் கூட இல்லை எளிமையாக இருந்தாள், கவரிங் நகைகளை அணிந்திருந்தாள். அதனால் அந்த பெண்ணே செயின் வளையல் மோதிரம் என வரிசையாக தங்க நகைகளை அடுக்கி வைத்தாள். பாரதியோ அவற்றை ஆஆவென பார்த்து வியந்துக் கொண்டிருக்க சக்தியோ அதனின் விலையைக்கண்டு மலைத்துப் போய்
”பாரதி பாரதி” என அவனின் சட்டையை பிடித்து இழுத்தாள்
”என்ன சக்தி அமைதியா இரு”
”பாரதி இது எல்லாம் விலையா இருக்கு எனக்கு வேணாம்”
”ஷ் அமைதி”
Thank you.