“என்னாச்சு கண்மணி? ஏன் அழற?” என்று ரம்யா பதறவும்.
“தினேஷ் தினேஷ் என்று நிறுத்த, தினேஷுக்கு என்ன” என்று ரம்யா பயப்பட
“தினேஷ் அம்மா அதிகாலையில் இறந்துட்டாங்கலாம்!” என்று சொல்ல, இப்போது ரம்யா கதறி அழத் தொடங்கினாள். கண்மணி என்றவள் மூச்சுவிடாமல் அவளைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். கண்மணியின் கண்களிலும் கண்ணீர் கொட்டியது. அவளின் முதுகில் ஆதுரமாகத் தடவிய கண்மணி, “அடக்கம்லாம் காலையிலேயே முடிச்சிட்டாங்க போலிருக்குமா! தினேஷ் வகுப்பில் எல்லாரும் இன்னிக்கு அவன் வீட்டுக்கு சாயங்காலம் துக்கம் கேட்கப் போறாங்க. நீயும் அவங்களோட போ, தினேஷுக்கு ஆறுதலாக இருக்கும்!” என்று கண்மணி சொல்ல, ஏங்கி ஏங்கி அழுது கொண்டே இருந்தாள் ரம்யா. தேவி கொஞ்ச நேரம் மட்டும் நீங்க ரம்யாவைப் பார்த்துக்க முடியுமா. இன்னிக்கு எனக்கு லேப் இருக்கு, அட்டெண்டன்ஸ் மட்டும் குடுத்துட்டு வந்து அவளை நான் லேடீஸ் ரூம் கூட்டிட்டுப் போய்டுறேன். என்றாள் கண்மணி.
தேவியும் ஒப்புக் கொண்டாள். லேடிஸ் ரூமில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்து நீண்ட மேசையில் தலை வைத்து அழுது கொண்டிருந்தாள் ரம்யா. கண்மணி லேபில் இருந்து வந்தமர்ந்தாள், “தினேஷுக்கு அப்பாவும் அம்மாவும் இல்லை, ரொம்ப கஷ்டம் அவனுக்கு! நீ தான் எப்பவும் துணையா இருக்கணும்! அவனுக்குத் தைரியம் சொல்லணும்! இந்த இழப்பில் இருந்து அவனை மீட்டெடுக்கணும்!” கண்மணி ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க, மனமெல்லாம் தினேஷின் வலியை நினைத்து ரணமாக வலித்தது.
ஒரு துண்டுப் பேப்பரை எடுத்தவள், “அன்புள்ள அம்மா, வேறு டிபார்ட்மென்ட்டில் உள்ள பிரெண்டின் அம்மா திடீரென்று காலமாகிவிட்டார்கள். அவங்க வகுப்பு மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து துக்கம் கேட்க நானும் போகிறேன். இந்த ஒரு நாள் உங்க அனுமதியில்லாமல் நான் அங்கே போறதுக்கு என்னை மன்னிச்சிருங்கம்மா. சீக்கிரம் வந்திருவேன்!சாரி!” என்று எழுதினாள்.
வகுப்புக்குச் சென்று தேவி, நீ இன்னிக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் , உன் ஸ்டாப்ல இறங்காமல், எங்க வீட்டுக்குப் போய் அம்மாகிட்ட இந்த லெட்டரைக் கொடுத்துரு ப்ளீஸ் என்றாள். நான் போய் உன் அம்மாகிட்ட கண்டிப்பாகக் குடுக்குறேன், நீ தைரியமா இரு!பத்திரமாப் போ! என்றாள் தேவி. ம் என்றவள் தினேஷின் வகுப்பினரோடு அவனின் வீட்டுக்குச் சென்றாள்.
நேரிலும் தினேஷின் அம்மாவை பார்த்ததில்லை, இறுதியாகக் கூட அவரின் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் மேலோங்கியது. யாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Thank you.