பைக்குடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. தனுஷ் சஞ்சய் பக்கமாக காரை செலுத்தி ஓரமாக நிறுத்தினான். பின் இறங்கி சஞ்சய் அருகே சென்றான்.
“என்னடா ஆச்சு?” தனுஷ் கேட்க
ஆச்சரியமாய் பார்த்த சஞ்சய் “அண்ணியை மீட் பண்ண போகாம இங்க என்ன பண்ற?” என கேட்டான்.
“இதோ மீட் பண்ண தான் போயிட்டு இருக்கேன். பைக்ல என்ன பிராப்ளம்?”
“தெரியல ஸ்டார்ட் ஆகல” மீண்டும் உதைத்தான்.
“விடு நான் பாக்குறேன் . . பெட்ரோல்” என சொல்லி முடிப்பதற்குள்
“இருக்கு” சஞ்சய் சொன்னான்.
தனுஷ் அமர்ந்து இன்ஜினை சரிபார்க்க துவங்க “ஐயோ கையெல்லாம் கிரீஸ் ஆகும். விடு நான் பாத்துகிறேன்” என்றான்.
அப்போதுதான் கவனித்தவனாய் தனுஷ் “ஹெல்மெட் எங்க?” என்றான்.
“ஹெல்மெட் போட்டா வண்டி ஸ்டார்ட் ஆகுமா? காமெடி பண்ணாத ப்ரோ” என நக்கலடித்தான்.
“ஏண்டா ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுற” தொனியில் அக்கறை தெரிந்தது
“உனக்கு அந்த டிராபிக் கான்ஸ்டபிளே பரவாயில்லை” என சஞ்சய் முணுமுணுக்க
சஞ்சையை முறைத்த தனுஷ் “லைசென்ஸ் ஆர்சி புக் இன்சூரன்ஸ் பேப்பர் இதெல்லாம் காட்டு” என்றதும்
“ப்ரோ இது ரொமான்ஸ் எபியாம் . . நீ போ அண்ணிய பாரு” கிண்டிலாக கூறியவனை முறைத்து
“எங்களுக்கு தெரியும் தம்பி . . நான் சொன்னதெல்லாம் கொடு முதல்ல” தனுஷும் சிரித்தபடி கேட்டான்.
சஞ்சய் தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் தேடுவது போல பாவலா செய்து “இருக்கு ஆனா இல்ல. . வேலட்ட மறந்துட்டேன்” மெதுவாக சிரிப்பை அடக்கியபடி கூறினான்.
“அது எப்படிடா செல்போனும் இந்த பாழாப்போன ஹெட்செட்டை மட்டும் மறக்கறதே இல்ல . . வண்டி ஓட்டும்போது பாட்டு வேண்டாம்னா சொன்னா கேக்குறியா?” என செல்லமாய் அடிப்பது போல செய்ய
“சில் ப்ரோ . . நீ கிளம்பு முதல்ல”
“நீ வீட்டுக்கு எப்படி போவ?”
“பிரெண்ட்ஸ்க்கு யாராவது ” என மென்றுமுழுங்கியவனை
“என்னோட கிளம்பு” தனுஷ் அவன் கையை பிடித்து இழுத்தான்.
“சரி . . சரி ஓலா உபேர் ஏதாவது ஒண்ணுல போயிடுவேன்” தன்னை விடுவித்துக் கொள்ள