“இவனை நடுரோட்ல விட்டுட்டு வந்திருக்கணும்” தனுஷ் நினைத்துக் கொள்ள
“இனிமே நினைச்சி என்ன ஆகப்போகுது வா” என்று மனதை புரிந்தவனாய் சஞ்சய் முன்னே நடந்தான்.
“ஹாய் அண்ணி . . ஹாய் எப்.” என்றவன் சட்டென நிறுத்தி இருமல் வந்தவன் போல் தொண்டயை கனைத்து “சௌமியா எப்படி இருக்க?” என்றான்.
“வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” தனுஷ் சஞ்சையை அடக்க அவசரமாக கேட்டான்.
“அப்பவே. . .”என சௌமியாவும் “இப்பதான் . . .” என பிருந்தாவும் ஒன்றாக கூறினர்.
“சாரி டிராபிக் அதான் லேட்” என மன்னிக்கும் பாவணையில் தனுஷ் சொன்னான்.
“டிராபிக் ப்ராப்ளம் இல்ல அண்ணி . . . என்னாலதான் லேட் . . சாரி” சஞ்சய் சொல்ல
“இன்னைக்கு முழுக்க சாரி மட்டுமே சொல்லிட்டு இருக்கப் போறோமா?” பிருந்தா வாய்மொழி திறந்தாள்.
முத்துபல் வரிசையாய் மொட்டவிழ . . அதரங்கள் குவிந்தும் விரிந்தும் நடனமாடியது. நயன பாஷையில் தனுஷின் இதயத்தை கணைகள் கொண்டு தாக்க முழுதுாய் தன் மனதை அவளிடம் ஒப்படைத்தான் தலைவன்.
“மாமா சிக்ஸ் பேக் பத்தி நான் என் யூடியூப் சேனல்ல போட்டிருக்கேன் கண்டிப்பா நீங்க பாக்கணும்” சௌமியா ஆர்வமாய் கூற
“ரொம்ப முக்கியம்” சஞ்சய் முணுமுணுக்க . . “நான் பார்த்தனே எக்சலண்டா இருக்கு” என்றான் வேண்டுமென்றே
விழிகள் விரிய “நிஜமாவா?” என்றாள்
“சிக்ஸ் பேக் நூடுல்ஸ் வாங்கினா ஒரு பேக் ப்ரீ அதானே?” எனவும்
சஞ்சையை கோபத்துடன் முறைத்து “அக்கா நான் என் பர்த்டேக்கு டிரஸ் வாங்க போறேன் . .” என்றவள் பின் “பை மாமா” என தனுஷிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள்.
“சௌமியா . . சௌமி” என சஞ்சய் அழைத்தபடி வேகமாக அவள் பின்னே சென்றான். தனுஷ் பிருந்தா இருவருக்கும் தனிமையை கொடுக்கதான். சௌமி சஞ்சய் சண்டை என்பது புரியாதவா்கள் அல்லவே இருவரும்.
சிறியவர்கள் கிளம்பியதும் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது .
“உனக்காக கிப்ட்” என அவளிடம் தனுஷ் காட்ட
ஆசையாக பிரித்து பார்த்தாள் “அழகா இருக்கு” என்றாள்.
தனுஷ் தானே மோதிரத்தை அவள் விரல்களில் பூட்டினான். அவனின் முதல் ஸ்பரிசம் அவளுள் மின்சாரம் பாய்வது போல் தோன்ற மெல்ல தன் கைகளை விடுவித்துக் கொண்டாள்.