Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.20 (5 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 31 - 4.2 out of 5 based on 5 votes

31. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

manam virumbuthe unnai

ள்ளே வந்த இந்துவின் முகத்தில் சஞ்சீவை பார்த்த உடனே முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போனது. மற்றபடி அவன் கேட்ட மன்னிப்பிற்கு அவள் முகத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. எதுவும் சொல்லாமல் நின்றவளிடம் எப்படி பேசுவது என்று தயங்கியவன், மீண்டும்,

 

"ஐ ஆம் டெரிப்லி சாரி இந்து..." என்றான்.

 

"ஓகே..."

 

அவள் கோப படுவாள் இல்லை அவன் இறங்கி வந்ததை உணர்ந்து சந்தோஷ படுவாள் என்ற எதிர்பார்ப்போடு இருந்தவனுக்கு, அவள் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் அமைதியாக இருக்கவும், குழப்பமாக இருந்தது. அவளை பார்த்தவன், அவளின் கண்கள் அந்த இடத்தில் எதையோ தேடுவதை போல் சுழல்வதை கண்டு,

 

"என்ன?" என்று கேட்டான்.

 

அவன் முகத்தை பார்த்து அவனின் கேள்வியை புரிந்துக் கொண்டு, 

"என் செல் போன் காணும்.... இங்கே தான் எங்கேயோ இருக்கனும்..." என்றாள்.

 

ஒரு கணம் தயங்கி விட்டு, காலையில் அவளின் கைபேசியை வைத்த இடத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கி கொண்டவள், எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனை பார்த்தாள். உனக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வியும் கேட்காமல், ஏன் எடுத்து வைத்தாய் என்று கோபமும் கொள்ளாமல் நின்றவளிடம் என்ன சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை.

 

எம்.பி.ஏ படித்தவன், பேச்சாற்றலில் சிறந்தவன் என்று பெயர் வாங்கியவன்,  கிளையன்ட் மனதில் இருப்பதை உணர்ந்து பேச்சிலேயே கவர்பவன், மிக விரைவாக திறமையால் தொழிலும் முன்னேறி கொண்டிருப்பவன், மனைவியின் மனதில் இருப்பதை அறிந்துக் கொள்ள முடியாமல், அவளிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று புரியாமல் திகைத்து நின்றான்.

 

அவன் பேசுவான் என்பது போல் காத்திருந்த இந்து, அவன் அமைதியாக இருப்பதை பார்த்து விட்டு,

"சரி நான் போகட்டுமா?" எனக் கேட்டாள்.

 

ஆம் என்பது போல் அவன் தலை அசைக்கவும், மின்னலென அவள் அறைக்கு சென்றாள். அவன் சொன்ன குட் நைட்டும் காற்றில் கரைந்து போனது. சஞ்சீவிற்கு இந்து புரியாத புதிராகவே இருந்தாள். என்ன தான் அவன் நிபந்தனைகளை அவள் ஏற்றுக் கொண்ட போதும், திருமணத்திற்கு பின் அவன் மனதை மாற்ற அவள் முயற்சி செய்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ அவனிடம் பேசினாளே தவிர அவனின் மனதை மாற்ற முயற்சி எதையும் எடுத்ததாக தெரியவில்லை. அவனை தவிர வீட்டில் அத்தனை பேருடனும் இனிமையாக பழகினாள், பேசினாள்... ஒருவேளை அவன் மீது அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்குமோ?

 

அவனின் மனதில் எழுந்த கேள்வியில், அவன் திடுக்கிட்டு போனான். எப்படி இருந்திருக்க வேண்டிய வாழ்வை தேவையே இல்லாமல் குழப்பி எங்கே வந்து நிறுத்தி இருக்கிறான். இந்து அன்று சொன்னதை ஏற்றுக் கொண்டிருந்திருந்தால் பிரச்சனையே இல்லையே (கதையும் அப்போதே சுபமாகி இருக்குமே!!!)!!!

 

ஞ்சீவ் வெளியில் குழம்பி இருக்க, உள்ளே அறையில் இருந்த இந்து, அவளின் கைபேசியில் இருந்த மிஸ்ட் கால்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். கீதா எத்தனை முறை அழைத்திருக்கிறாள் என்பதை கவனித்தவளின் முகத்தில் புன்னகை தோன்றியது. கீதா போல், வீணா போல் தோழிகள் கிடைக்க அவள் அதிர்ஷ்டசாலி தான். அவளின் முகத்தில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்களை கொண்டே அவள் மனதில் ஓடுவதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியும்... இதில் எல்லாம் அதிர்ஷ்டம் இருந்து என்ன அவளின் திருமண வாழ்க்கை தான் அலங்கோலமாக இருக்கிறதே... இந்த எண்ணம் தோன்றிய உடனேயே சில நிமிடங்களுக்கு முன் சஞ்சீவ் சொன்ன சாரி நினைவில் வந்தது. அவளின் முகத்தில் புன்னகை தோன்றியது, கூடவே யோசனையும் வந்தது...

 

அவன் மன்னிப்பு கேட்கிறான் என்று மகிழ்ச்சி அடைந்தால் அடுத்த வினாடியே அவன் தான் மீண்டும் 'மலை' ஏறி விடுவானே! அவனை முதல் சந்தித்ததில் துவங்கி ஒவ்வொரு சந்திப்பையும், பேச்சையும் மனதில் ரீவைன்ட் செய்து ஒட்டியவள், பழைய மகிழ்ச்சியான நாட்களின் நினைவில், புன்னகையோடு, டைரியை கையில் எடுத்தாள். அவளுக்கு பொதுவாக தினமும் டைரி எழுது பழக்கம் எல்லாம் இல்லை, மனதில் கவலையோ, மகிழ்ச்சியோ அளவுக்கு அதிகமாக இருக்கும் பொது, உடனே அதை பகிர்ந்துக் கொள்ள யாரும் இல்லை என்றால் எழுதுவது தான்....

 

சஞ்சீவை சந்தித்த நாளில் இருந்து பல பக்கங்கள் அந்த டைரியில் அவளின் அழகிய கையெழுத்தில் நிரம்பி இருந்தது! இப்போது எதையும் அவளின் நெருங்கிய தோழியிடமோ, அன்னையிடமோ பகிர்ந்துக் கொள்ள முடியாததால், கிட்டத்தட்ட எல்லா நாட்களும் அதில் அவளின் மனதில் தோன்றுவதை எழுதுவது வாடிக்கையாக இருந்தது. ஏனோ அவளுக்கு அன்றைய நிகழ்வுகளை எழுத மனம் வரவில்லை... சஞ்சீவின் 'வில்லத்தனமான' செய்கையால் நடந்தவற்றை நினைப்பதை விட, அன்று முழுவதும் ரஞ்சனி மூலம் அவனை பற்றி அறிந்துக் கொண்டிருந்த விஷயங்கள் அவள் மனதில் நிறைந்திருந்தது.

 

கல்லூரி நாட்களில் அவன் செய்த குறும்புகளையும், அடாவடித்தனங்களையும் ரஞ்சனி சொன்ன போது, வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்!  இப்போது அதை எல்லாம் நினைவில் கொண்டு வரும் போதும் கூட அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது... கூடவே நாள் முழுவதும் அலைந்த களைப்பும், இரவில் நடந்த கலாட்டாவினால் ஏற்பட்ட சோர்வும் கூட காணாமல் போனது....

சஞ்சீவிடம் அவளுக்கு கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருந்தது... அதன் பிறகு அவனிடம் பேச வேண்டிய விஷயங்களும் நிறைய இருந்தன... அவனின் சின்ன சின்ன ரசனைகள் முதல் பெரிய பெரிய கனவுகள் வரை அனைத்தையும் அறிந்துக் கொள்ள அவளுக்கு ஆர்வமாக இருந்தது... அவனை விட்டு இப்படி விலகி இருப்பது கடினமாக இருந்தது... இப்போதே வெளியில் சென்று அவனை இறுக அணைத்தால் என்ன செய்வான்? அவளின் எண்ணம் போகும் போக்கை கண்டு அவளுக்கே வெட்கமாக இருந்தது... சரியான பைத்தியம் தான் பிடித்திருக்கிறது.... இன்று அவன் செய்ததற்கு கோபம் வர வேண்டாமா? ஹுஹும்ம்ம்... என்ன முயன்றும் அவளால் அவன் மேல் கோபம் கொள்ள இயலவில்லை... அதற்கு முக்கிய காரணம், அன்று ரஞ்சனி மூலம் அவனை பற்றி அறிந்திருந்த நல்ல விஷயங்கள்....

 

வீட்டில் விளையாட்டு பிள்ளையாக இருந்த போதும், சஞ்சீவ் வெளியில், அவனின் நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறான்... இதை எல்லாம் அவனிடமே சொல்லி பாராட்ட வேண்டும்... அதற்கு அவர்களுக்குள் எல்லாம் சரியாக வேண்டும், அது எப்படி? எதை எதையோ எண்ணியபடி அந்த டைரியை புரட்டியவளின் கண்களில் அந்த வரிகள் பட்டன... மீண்டும் படித்தவளின் கண்கள் மலர்ந்தன... மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது போல் தோன்றியது!

 

கணவனும், மனைவியும், ஒவ்வொரு திசையில் இருந்த படி மற்றவரை எண்ணியபடியே அந்த இரவை தூங்காமல் கழித்தனர்!

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Rajeswari V 2013-05-19 17:28
Hi Aadhi,

Please update soon..... Nice going :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Thenmozhi 2013-05-20 07:14
Thanks Rajeswari.

Next episode is online now, please check it out.
Reply | Reply with quote | Quote
# MVUAbirami 2013-05-19 12:29
Hi Aadhi,

Waiting for your update..
Update soon....Please...
Reply | Reply with quote | Quote
-1 # RE: MVUThenmozhi 2013-05-20 07:14
Hi Abirami,
Episode 32 is online now, please check it out :-)

Thanks
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 31Sakthi Mohan 2013-05-16 12:36
hey... no problem yaar 8) ..take ur time...atleast u dropped us a note about the delay :P
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Thenmozhi 2013-05-16 07:24
Hello everyone,
I need a day or two to finish my next episode... I am sorry for the delay...

Will surely update in a day or two... Thanks for all your understanding and support :-)
Reply | Reply with quote | Quote
+1 # MVUjeny 2013-05-16 07:04
HI Aadhi,,,


waiting for ur update,,,,,,,,,,,,,,,,,,,, :sad: :o
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-05-16 07:22
Sorry Jeny, there's a slight delay in publishing the next episode...
Reply | Reply with quote | Quote
# Nice NarrationKeerthi 2013-05-15 18:30
Hi Aadhi,
I got to read your story just today. completed all episodes in one shot... how to say... so many things to admire.. but you took a very strong storyline... long time friendship.. that too within girls.. so rare to see.. being so Jealous of those ladies :-) .. Continue the great job...please post next episode soon :-)
Reply | Reply with quote | Quote
# RE: Nice NarrationThenmozhi 2013-05-16 07:22
Thanks a lot Kerthi :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Guest 2013-05-10 02:04
This comment has been deleted by Administrator
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Guest 2013-05-10 02:03
This comment has been deleted by Administrator
# Bad SanjeevVadhana 2013-05-06 22:16
Sanjeev ku yenna than vaenum. y making this much tension.

sanjeev is bad pa..
Reply | Reply with quote | Quote
# RE: Bad SanjeevThenmozhi 2013-05-10 02:09
:-)

ellorum 100% good'a irukka mudiyaathu thaane Vadhana/

:-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Ponni 2013-05-06 13:09
sanjeeve purijikave mudiyala :sad:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Thenmozhi 2013-05-10 02:08
Avar puriyaatha puthir!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Admin 2013-05-04 22:01
Sanjeev, Veena vidam eppadi kobamaa pesalaam? Wife kitta koba pattaal paravaayillai, wife friend meala ellam kobam kaattalaamaa?

Yen saarbaa, unga hero virkku oru kottu vainga Aadhi :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Thenmozhi 2013-05-10 02:08
:-)

I know you will say that... Kvaaliye padaatheenga, kottiduvom!
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 31sreetha 2013-05-03 11:49
hmmm so sad for indu ....sanjeev make her sad again... :sad:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Thenmozhi 2013-05-10 02:07
Adadaa Sreetha, kathai mudiyanum'la :-)
Reply | Reply with quote | Quote
+1 # MVUMuthukani 2013-05-03 11:33
Unexpected nd nice update.....
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-05-10 02:07
Thnaks Muthukani :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனம் விரும்புதே உன்னை... - 31AmuthaRajan 2013-05-03 10:33
unexpected episode Aadhi...
U r too good.
Waiting to see sanjev n indhu 2gether :lol:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 31Thenmozhi 2013-05-10 02:07
Thanks Amutha :-)
Reply | Reply with quote | Quote
+2 # MVUS.MAGI 2013-05-03 09:26
Hi Aadhi mam,
thank u so much for the updates..since morning i keep looking for your updates..im very happy...

SANJEEV kuda marurare...good changes....and if INDHU really take over her company back, it will sound better...

Again thanks a lot...U R SUPER... :lol:
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-05-10 02:05
Thanks Magi :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top