This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
தலைப்பைத் தேர்ந்தெடுத்து டிபார்ட்மென்ட்டில் அனுமதி வாங்கிவிட்டு செய்யவேண்டியது தான். நாற்பத்தி ஐந்து தினங்கள் ப்ராஜெக்ட்டிற்கும் இருபத்தி ஐந்து தினங்கள் ரிப்போர்ட் தயார் செய்வதற்கும் எடுத்துக் கொண்டு ப்ராஜெக்ட் கைடாக இருக்கும் ஆசிரியரிடம் ப்ராஜெக்ட் ரிப்போர்டை சமர்ப்பிக்க வேண்டும். டிபார்ட்மெண்டில் குறிப்பிடப்படும் நாளில் அதை செமினாராக எடுக்க வேண்டும். தியரி வகுப்புகள் முடிந்ததும் வேறு வகுப்புகள் எதுவும் இருக்காது என்பதால் மாணவர்கள் தன்னிச்சையாக வேலை செய்வர்.
தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே மாணவர்கள் இருந்தால்தான் நேரத்தில் ப்ராஜெக்ட் செய்து முடிப்பார்கள் என்ற எண்ணத்தில், ஹெச்ஓடி எல்லாரையும் கல்லூரி வளாகத்தில் அமைந்த லேபில் ப்ராஜெக்ட் செய்யச் சொன்னார். ரம்யாவின் அப்பாவிற்கு இதில் ஒப்புதலில்லை. வகுப்புகளின்றி வளாகத்தில் சுதந்திரமாக ரம்யா இருந்து அது அவளின் கவனத்தை தினேஷின் பக்கம் திருப்புமோ என்று அச்சம். கல்லூரிக்கு வந்து, டிபார்ட்மெண்டில் அவரே ஹெச் ஓடியை நேரில் சந்தித்து ரம்யா வெளியில் தனியாக கம்பெனியில் சென்று ப்ராஜெக்ட் செய்ய அனுமதி கேட்டார். இதுவரை செமெஸ்டர் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுத்த மாணவி என்பதால், ஹெச்ஓடியும் அனுமதி வழங்கினார். ரம்யாவின் ப்ராஜெக்ட் கம்ப்யூட்டர் லேப் அட்மினிஸ்ட்ரேஷன் செய்பவர்களுக்கு கம்ப்யூட்டரில் ஏற்படும் கோளாறுகள் குறித்து அவர்களின் கைபேசியில் எஸ்எம்எஸ் சேவை வழியாக செய்தி அனுப்பி நினைவூட்டுவது. அச்சமயம் செல்போன்கள் எங்கெங்கும் தம் ஆதிக்கத்தைத் தொடங்கிய காலம் என்பதால், அந்த ப்ராஜெக்டைத் தேர்வு செய்திருந்தாள்.
அப்பா, இது படிப்புக்கு மட்டும் என்கிற பலத்த அறிவுரையோடு தான் அவளுக்கு ஒரு நோக்கியா செல்போன் வாங்கிக் கொடுத்தார். தேவி தான் அவளின் ப்ராஜக்ட் பார்ட்னர். ரம்யா, தேவி இருவரையும் கம்பெனியில் அறிமுகப்படுத்தி வைத்தும், அங்கே படிக்க வேண்டிய ப்ரோக்ராம்மிங் கோர்ஸுக்குப் பயிற்சிக் கட்டணம் செலுத்துவதிலும், ஹாஸ்டலில் சேர்ப்பதிலும் மும்முரமாக இருந்த அப்பாவைப் பார்க்க ரம்யாவிற்குப் பாவமாக இருந்தது. தனது படிப்புக்காகத் தான் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாங்க என்று நினைத்தாலும், மறுபுறமே எவ்வளவு அக்கறை இருந்தாலும், அங்கேயே கல்லூரி வளாகத்தில் இருந்து ப்ராஜெக்ட் செய்து கொண்டு தான் தினேஷைப் பார்ப்பதைத் தடை செய்யவே இந்த வெளியூர் கம்பெனி ப்ராஜெக்ட், ஹாஸ்டல் என எல்லாம் என்றும் அவளுக்குப் புரிந்தது.
அவளின் நோக்கியா செல் நம்பரை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று மிகுந்த கண்டிப்புடன் சொல்லிவிட்டு அப்பா கிளம்பிச் செல்ல, ரம்யாவுக்கும் தெரிந்தது, கால் ஹிஸ்டரி பதிவுகளை செல்போனில் இருந்து அழித்தாலும் செல்போன் இணைப்புக்கான போஸ்ட்பெயிட் பில்லில் இன்கமிங் கால்கள் நம்பரைக் காட்டிக் கொடுத்துவிடும். காலையில் கோர்ஸ், நண்பகல் முதல்
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.