(Reading time: 17 - 33 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

வருத்தமாக இருந்தது. அவள்  தினேஷை நினைத்தவாறே மாடிப்படிகளில் சிறிதுநேரம் அமர்ந்தாள். தனது வாழ்க்கையை மாற்றிய இந்த இடத்தில்  அதற்குக் காரணமான தினேஷ் தற்போது இங்கே இருந்தால் நல்லாயிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

முதல் செமெஸ்டர் தேர்வு முடிவுகள் வந்த நாளில், கம்ப்யூட்டர் லேபில் அவனைப் பார்த்த நினைவு வரவும், அங்கும் செல்லலாம் என்று சற்றுத் தூரம் தள்ளியிருந்த  அந்த கட்டிடத்திற்குச் சென்றாள். இரண்டாம் தளத்தில் இருந்த கம்பியூட்டர் லேபிற்குச் சென்றவள் கதவினைப் பிடித்துத் தள்ள முயல, அது சாவியை வைத்துப் பூட்டப்பட்டிருந்தது தெரியவும், ச்சே என்றவாறே திரும்பினாள். படிகளில் இறங்க முற்பட்டவளின், கவனத்தை மூன்றாம் தளத்தின் படிகளில் யாரோ இறங்கும் சத்தம் நிறுத்தியது. “என்னையவா தேடி இங்கே வந்த?” என்ற தினேஷின் குரல் கேட்கவும், ரம்யாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.

பலநாட்கள் அவனைக் காணாமலும், பேசாமலும் தவிப்பில் இருந்தவள், அவனை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். தினேஷ் இதை சற்றும் எதிர்பாராததால் அவனுக்குள் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி. ரம்யாவின் நாசியில் தினேஷின் வாசனை. அவளின் விழிகளை இறுக்கமாக மூடியிருந்தாள். அவளின் கண்களைத் திறக்க, தன் விரல் கொண்டு அவளின் இமைகளைத் தொட்டு மெதுவாக விரித்தான். அவ்வளவு நெருக்கத்தில் அவளின் பெரிய அவளின் கண்களும், அதன் உள்ளோடும் நரம்புகளும் அவனையும் எதோ செய்ய, இயல்பான பயத்தினால், அவளை விலக்கினான். அவளும் சுதாரித்தவளாக, “சாரி தினேஷ், ரொம்ப எமோஷனலா இருந்தேன்! சாரிடா!” என்றாள். “நாம கல்லூரில அப்பப்போ பார்த்துக்கிட்ட பேசிக்கிட்ட இடங்களைப் ஒருமுறை பார்த்துட்டு போலாம்னு தோணுச்சு, அதான் சீக்கிரமா வந்தேன்.! ஏனோ ரம்யாவின் உதடுகள் மெலிதான நடுக்கத்தில் இருப்பதை அவள் பேசுகையில் கவனித்த தினேஷ், “நீ இப்படி வருவியோன்னு எனக்குத் தோணுச்சு ரம்யா. அதான் உன்னைப் பார்க்கலாம்னு நானும் சீக்கிரமா வந்தேன்!” என்றான். இது தான் அவர்களுக்கிடையே இருந்த புரிதல். அவள் கைகளை மெதுவாகப் பிடித்தான், அவை சில்லிட்டு இருந்தன. அவள் மிகவும் பதற்றமாக இருப்பது போல அவனுக்குத் தோன்றவும், “கொஞ்ச நேரம் இந்த படிகளில் உக்கார்ந்தே பேசலாமா? யாரும் வரமாட்டாங்கனு நினைக்கிறேன்!” என தினேஷ் சொல்ல, ரம்யா மேலிருந்த படியில் உட்கார, கீழிருந்த படியில் யாரேனும் ஏறி வந்தால் கவனிக்கும் வகையில் அவன் உட்கார்ந்து கொண்டான்.சில நிமிடங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். திடீரென ஒரு வினாடி, “அம்மா!” என்ற தினேஷ், “உன் மடில படுத்துக்கிறேன்மா!” என்றான். அவள் தலையசைக்க, அவன் மடியில் படுக்கவும், அவன் தலைமுடிக்குள் மெதுவாக தனது கைவிரல்களை நுழைத்து

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

9 comments

  • :thnkx: தோழி! அவர்களின் பொறுமைக்கும், முயற்சிக்கும் நிச்சயம் நல்லதே நடக்கும் கிடைக்கும் :-)
  • :thnkx: தோழி! கிளைமாக்ஸ் விரைவில் !
  • ஆர்வத்துடன் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி தோழி. பாகம் ஒன்று நீங்கள் சில்சீ தளத்தில் படிக்கலாம்! :thnkx: தோழி
  • [quote name=&quot;Priyankamanikandan&quot;]I am first super mam iokk part 1 re run pannugalen nan athai patikkala please[/quote]<br />Hai Priyanaka, you can read the first part @chillzeekimo.
  • Gives a nostalgic feel 😍😍😍 nice update ma'am 👏👏👏👏👏👏👏 Ramya oru mudivodu irukanga 👌 hope dinesh also finds a job soon and get settled in life...<br />Parents-i eppadi samadhika vaipanga nu parka curious aga iruken ma'am :yes: <br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.