Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
மனம் விரும்புதே உன்னை... - 32 - 5.0 out of 5 based on 1 vote

32. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

manam virumbuthe unnai

ஞ்சீவ் என்ன சொல்லி சமாளிப்பது என சிந்தனையில் இருக்கும் போதே,

“வாங்க சாப்பிட போகலாம்...” என்ற இந்துவின் குரல் அவனுக்கு பின்னிருந்து கேட்டது.

ஓரளவிற்கு நிலைமையை புரிந்துக் கொண்டிருந்த கீதா, வீணாவை கையை பிடித்து வலுக் கட்டாயமாக அழைத்து செல்ல, இந்து மெதுவாக நடக்க தொடங்கினாள். அங்கே நின்றிருந்த சஞ்சீவை கடந்தவள், நின்று, திரும்பி,

“நான் உங்களிடம் முன்பே சொல்லி இருக்கேன், என் தோழியிடம் இது போல் பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதுவே கடைசி முறையா இருக்கட்டும்...” என்று சற்றே கடுமையாக சொல்லிவிட்டு, கீதாவும், வீணாவும் சென்ற திசையில் சென்றாள்.

சஞ்சீவ் ஒரு சில வினாடிகள் சிலையென நின்றான். பின் மெதுவாக அவன் முகத்தில் மலர்ச்சியும், இதழ்களில் புன்னகையும் தோன்றியது. இந்து இதுவரை அவனிடம் மகிழ்ச்சியாக பேசி இருக்கிறாள், அழுதிருக்கிறாள், கவலை பட்டிருக்கிறாள், ஏன் கண்டுக் கொள்ளாமல் கூட இருந்திருக்கிறாள். ஆனால் இது போல் கடினமாக எதுவுமே சொன்னதில்லை... அந்த குரலில் என்ன ஒரு தோரணை? கோபம் என்று சொல்ல முடியாமல் உணர்ச்சியே இல்லாத தொனி தான், ஆனாலும் ஒருவிதமான அழுத்தமான தோரணை. ஆனாலும் ஏனோ அவனுக்கு சிறு குழந்தை தன் வயதிற்கு மீறி மிரட்டி போவதாக அவனுக்கு தோன்றியது. அதே புன்னகையோடு வந்தவன், எதிரில் சற்றே வாடிய முகத்துடன் நிலாவையும், கோபமாக நந்தினியையும் கண்டான்.

“என்ன நிலா மேடம், செம டோஸா?” என்றான் அதே புன்னகையுடன்.

நிலா எதுவும் சொல்லாமல் நந்தினியை பார்த்தாள். ஒரு விதத்தில் அவளின் வருத்தத்திற்கு தானும் காரணம் என்று தோன்றவும்,
“ஏன் நந்தினி, நிலாவை ரொம்ப திட்டினீங்களா என்ன? இந்து என் மேல் இருக்கும்...”

அவன் பேசி முடிக்கும் குறுக்கிட்ட நந்தினி,

“அன்பினால் தான் செய்திருப்பாள், புரியுது சஞ்சீவ், ஆனால் எத்தனை பேர் கேட்குறாங்க தெரியுமா, என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தானே?”

“ஏன் நந்தினி உங்களுக்கு இந்துவை தெரியாதா என்ன? உங்களுக்கு தெரிந்தால் நடக்காதுன்னு தானே நிலவை அப்ரோச் செய்திருக்கா, விடுங்க பாவம் நிலா என்ன செய்ய முடியும்?”

“அதுவும் சரி தான். சரி நிலா நீயும் போய் சாப்பிடு போ... ஏன் சஞ்சீவ் நீங்க சாப்பிடலையா?”

“என்ன செய்ய நந்தினி, எல்லோரும் என்னை அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாங்க..”

“ரொம்ப பீல் செய்யாதீங்க வாங்க நான் உங்களுக்கு கம்பெனி கொடுக்கிறேன்...”

“தேங்க்ஸ் நந்தினி, ஆனால் சேகர் எங்கே?”

“எங்களுக்குள் எல்லா நேரத்திலும் ஒன்னா சாப்பிடும் பார்மாலிட்டி எல்லாம் இல்லை, அவர் இந்நேரம் சாப்பிட்டு முடிச்சிருந்தாலும் ஆச்சர்யம் இல்லை, ஆமாம் இந்து எங்கே?”

“வீணா அண்ட் கீதா கூட இருக்கா...”

புன்னகையோடு சொன்னவனை பார்த்து விட்டு,

“அவங்க மூணு பேரும் லக்கி சஞ்சீவ்... அவர்களுக்குள் இருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் மட்டும் இல்லாமல் ஒவ்வொருத்தரின் ஹஸ்பண்டும் கூட அவங்க நட்பை புரிந்தவர்களாக இருக்கீங்களே!”

“தேங்க்ஸ் நந்தினி! ஆனால் அவளுடைய பிரென்ட்ஸ் அவளுக்கு பேமிலி போல தானே!”

பேசியபடி இருவரும் உணவு உண்ண ஆரம்பித்தனர்.

தே நேரம் சற்று தள்ளி கீதா, வீணாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கண்களை சுழற்றிய படி அமர்ந்திருந்த இந்துவின் கண்களில் சஞ்சீவும் நந்தினியும் பட்டனர். சஞ்சீவின் அன்பில் நூறு சதவிகித நம்பிக்கையும், நந்தினி சேகர் மனம் ஒன்றிய தம்பதியர் என்பதும் தெரிந்து இருந்த போதும், இந்துவின் கண்களில் பொறாமை ரேகைகள் தோன்றியது.

அவளின் முக மாற்றத்தை பார்த்து அந்த பக்கம் பார்த்து விஷயத்தை புரிந்துக் கொண்ட வீணாவும் கீதாவும், அவர்களுக்குள் ஒரு புன்னகையை பகிர்ந்துக் கொண்டனர். இந்துவின் பார்வை இன்னமும் அந்த பக்கமே இருக்க, அவர்கள் இந்துவிடம் பேச விரும்பிய விஷயம் முக்கியமானது என்பதால், கீதா,

“இந்து, நீ சொன்னால் தானே எங்களுக்கு புரியும். உங்க இரண்டு பேருக்குள் என்ன பிரச்சனை? சின்னதாக இருப்பது பெரிசாகும் முன் சரி செய்து விடலாம்...” என்றாள்.

பார்வையை திருப்பி தோழிகளை பார்த்த இந்து,

“ப்ச், பெரிசா எதுவும் இல்லை... அப்படி ஏதாவது இருந்தால் நானே உங்க இரண்டு பேர் கிட்ட சொல்லி இருக்க மாட்டேனா?”

“ஒரு ஆறு ஏழு மாசம் முன்பு இதை நீ சொல்லி இருந்தால் நானும் நம்பி இருப்பேன், ஆனால் வீணாவிற்கு மட்டும் தெரிந்து எனக்கு தெரியாத விஷயங்களே நிறைய இருக்கே.”

“ப்ளீஸ் கீதா மேடம், சின்ன விஷயம் எல்லாம் உங்க லெவெலுக்கு எஸ்கலேட் செய்த மாதிரி இருக்க வேண்டாம் தானே? என் கையை மீறி ஏதாவது போகும் போது கட்டாயம் உங்களிடம் ஹெல்ப் கேட்பேன்.”

“இந்து, நீ எப்போ இப்படி மாறின?” என்றாள் வீணா.

“நான் மாற எல்லாம் இல்லை... சரி நீங்க இரண்டு பேரும் எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க. அவினாஷ், ராஜீவ் இரண்டு பேரும் ரொம்ப நல்ல டைப், வைப் மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்கள் தெரியும். ஆனால், கல்யாணத்திற்கு பிறகு ஒரு சின்ன பிரச்சனை கூட வந்ததே இல்லையா? இன்று வரைக்கும் நீங்க இரண்டு பேரும் அது போல் ஏதாவது சொல்லி இருக்கீங்களா என்ன? “

பதில் சொல்லாமல் மற்ற இருவரும் அமைதியாக இருக்க, இந்துவே புன்னகையோடு தொடர்ந்தாள்.

“இதெல்லாம் சாதாரண விஷயம் தான்... சஞ்சீவ் ராஜீவின் தம்பி என்பதால், இதெல்லாம் உங்க கண்ணுக்கு படுது... அவர் பிஸ்னஸ் புதுசா ஸ்டார்ட் செய்திருப்பதால் அதில் இன்னும் கொஞ்சம் போகஸ் செய்றார், வேற எதுவும் இல்லை...”

ஒன்றுமே இல்லை என்பது போல் இந்து சொன்னதை கேட்டு கீதாவும், வீணாவும் நம்ப தான் செய்தார்கள்!

“ஓகே இந்து, உங்க இரண்டு பேர் விஷயத்தில் நாங்க மூக்கை நுழைக்க விரும்பலை, ஆனால் இடைவெளிகள் சின்னதாக இருக்கும் போதே சரி செய்வது நல்லது...” என்றாள் வீணா.

“சரிங்க வீணா பாட்டி...” என்றாள் இந்து சிரிப்போடு.

“ஆமாம், எப்போதும் வார்த்தைக்கு நூறு தடவை அக்கா அக்கான்னு சொல்வ, இப்போ பேச்சில் அக்கா மிஸ்ஸிங்? “

“அட, அந்த ரகசியம் உனக்கு தெரியாதா? நாம இவங்களை அக்கான்னு கூப்பிட்டால் ராஜீவிற்கு ரொம்ப கஷ்டமா இருக்காம்...”

“ஏன்???”

“வேறென்ன அவருடைய வைப் வயசு ஜாஸ்தியான மாதிரி இருக்காம்...”

“இதெல்லாம் ரொம்ப ஓவர், நான் அக்கான்னு தான்ப்பா கூப்பிடுவேன்.... நீங்க என்ன நினைக்குறீங்க கீதா அக்கா..., சொல்லுங்க அக்கா...”

“நான் எப்போதாவது ஏதாவது சொல்லி இருக்கேனா?”

“அப்போ சரி... நாளைக்கு கோவிலுக்கு போகும் போது கவனிச்சுக்கிறேன்...”

“வீணா, நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லனும்...” என இந்து சற்றே பீடிகையோடு தொடங்கவும்,

“என்ன விஷயம் இந்து, சொல்லு” என்றாள் வீணா.

“சஞ்சீவ் இன்னைக்கு கோபமா பேசியதை மனசில் வச்சுக்காதே... அவரே உன் கிட்ட வந்து சாரி சொல்வார்... என் மேல் இருந்த கோபத்தை தான் உன் கிட்ட காட்டினார்...”

“ம்ம்ம்ம்....”

“நிஜம் வீணா. அம்மா பேர் சொன்னால் என்ன என் பேர் சொன்னால என்ன? சஞ்சீவ் தேவை இல்லாமல் வருத்தப் படக் கூடாதேன்னு தான் நிலாவிடம் அப்படி மாற்ற சொன்னேன்...”

“என்ன ஒரு நல்ல வைப்... இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா? இதுக்கு தான் இந்து நிறை பழைய ப்ளாக் அண்ட் வைட் படம் எல்லாம் பார்க்க கூடாது... “ என்றாள் வீணா வழக்கமான உற்சாகத்துடன்.

அதன் பின் அவர்களின் வழக்கமான பேச்சுக்கள் தொடர்ந்தது.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
-2 # RE: மனம் விரும்புதே உன்னை... - 32Thenmozhi 2013-05-31 04:56
I am really sorry friends... There's a slight delay... Will post it by tomorrow this time...

I am terribly sorry...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 32SHIRUTHADEWI SETHAREN 2013-05-30 06:28
adhi mam wait for ur updates dont be late this time okay...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 32Thenmozhi 2013-06-01 22:28
Hi,
Sorry for the delay, next episode is online now :-)
Reply | Reply with quote | Quote
-1 # மனம் விரும்புதே உன்னை-33amul 2013-05-27 20:51
enalu entha noveloda contonue vanum
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை-33Thenmozhi 2013-06-01 22:27
Hi Amul,
Next episode is online now, please check it out and LMK your comments!
Reply | Reply with quote | Quote
+1 # மனம் விரும்புதே உன்னை-33amul 2013-05-27 20:50
enaku entha novel loda continue vanum
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 32Admin 2013-05-25 09:28
Aadhi,
Sanjeev ippadi iruntha than madam nalla irukku :-)

Inimel avarai koba pada vaikatheenga :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 32Thenmozhi 2013-06-01 22:27
Sure Shanthi madam!
Reply | Reply with quote | Quote
+2 # MVUAbirami 2013-05-20 12:41
Hi Aadhi mam,
Very nice updta..
So, Indhu and Sanjeev is going to join.. right?..
Waiting for your next episode..
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-06-01 22:27
Yes Abirami, kathai mudiya pogirathu :-)
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 32Ponni 2013-05-20 11:38
Hi Adhi,

Very nice update.... :-)
Indu Jealous ;-)
Sanjeev changes 8)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 32Thenmozhi 2013-06-01 22:26
Thanks Ponni!
Reply | Reply with quote | Quote
+1 # MVUS.MAGI 2013-05-20 08:17
Hi Aadhi madam,

SUPER SUPER SUPER...super updates...thankx a lot..but this time story konjam short a irukke Aadhi?

Sanjeev's character in this episode is very nice...
AGAIN THANKS A LOtttttt.... :-)
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-06-01 22:26
Hey Magi,
Thanks for your comments :-)
Intha episode'rkku serthu, adutha epsiode'l extra'vaa oru page add seithirukkiren!

Thanks Magi
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top