(Reading time: 13 - 25 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

ரம்யாவுக்குத் திக்கென்றாகியது.

சற்று நேரம் கழித்து அப்பாவிடம் சென்று, “அப்பா! இன்னும் ஒரு வருடம் கழித்துத் தான் நான் கம்பெனிக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பான்ட் முடிகிறது. அதற்குள் வேலையை விட்டு நின்றால் இரண்டு லட்ச ரூபாய் நாம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று இருக்கும்பா! என்றவளிடம்  அவர் உடனடி பதிலாக, “நீ ஏன் வேலையை விடணும்? கல்யாணம் பண்ணிட்டும் வேலை பாரு!” என்றார். ஜாதகம், சம்பளம், வயது,படிப்பு என்று பல விஷயங்களைப் பார்த்துக் கொண்டு அப்பா, வரன்கள் தேட, எதுவும் வரன் உடனடியாக அமையாமல் இருந்தது ரம்யாவிற்கு நிம்மதியாகவே  இருந்தது.அவளும் இதை சீரியசாக எடுக்கவில்லை, தினேஷிடமும் பதட்டப்பட வேண்டாமென்றே சொல்லிவைத்தாள்.

சத்யாவிற்கு நல்ல வரன் அமைந்து, திருமணம் கூடிவர. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளின் திருமணத்தில் கலந்து கொண்டாள். கல்யாணத்தில் சத்யாவின் தாத்தா, ரம்யா அடுத்து உன் கல்யாணம் தான் என்று சொல்ல சிரித்தாள்.

அவள் ஊருக்கு சென்ற மறுவாரமே பல்கலைக் கழக பட்டியல் வெளியிடப்பட, இன்ஜினியரிங் டிகிரியில் முதல் இருபது ரேங்கில் ஒருவளாய் வந்து, டிஸ்டிங்சன் பெற்றிருந்தாள். கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற, குடும்பமே அவள் பட்டம் பெறுவதைப் பார்க்க வந்துவிட்டது. எப்பவும் போல் விழாவில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாத தினேஷ், தனியாக கல்லூரிக்கு வந்து டிகிரி சான்றிதழ் வாங்கிக் கொள்வதாய் சொல்லிவிட்டான். டிகிரியும் கையில் வந்தாச்சு, இன்னும் என் நேரம் கடத்துற, சீக்கிரம் அவ கல்யாணத்தை நடத்து என்று பாட்டி ரம்யாவின் அப்பாவை நச்சரிக்கத் தொடங்கினார். அவளுக்கே கல்யாண ஆசை வந்திருக்கும் என்று சத்யாவின் கல்யாணத்தை சுட்டிக்காட்டி சொல்லவும், சத்யாவின் திருமணத்தில் உயிர்த்தோழி என்ற முறையில் தான் வெளிக்காட்டிய ஈடுபாட்டையும் மகிழ்ச்சியையும் பார்த்து அது தனக்கே திருமண ஆசை என பாட்டி தவறாகப் புரிந்துக் கொள்ளக் காரணமாகிவிட்டதே என்று வருந்தினாள். பாட்டியும் ஜாதி பார்ப்பவர், அவரிடம் தன் காதலைப் பற்றிச் சொன்னாலும். நிச்சயம் தினேஷை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரியும். ஒவ்வொரு முறையும் அவள் ரயிலேறச் செல்லும் முன், பாட்டி வீட்டுக்குச் செல்வாள், திருநீர் சம்புடத்தை எடு என்பவர், நெற்றி நிறைய பூசிவிட்டு, “பத்திரமா இரு!” என்பார், அதில் ஆயிரம் அர்த்தங்கள் என்று ரம்யாவுக்குத் தெரியும். மனதை அலைபாய விட்டுவிடாதே என்பது தான் உள்ளர்த்தம். காதலில் ஈடுபடக்கூடாது என வெளிப்படையாக சொல்லாமல் இலைமறை காய்மறையாக அறிவுறுத்தும் வார்த்தைகள் அவை என்பதை ரம்யாவும் நன்கு அறிந்திருந்தாள்.

மாதம் ஒருமுறை ரயில் நிலையத்திலோ அல்லது தி.நகர் பாண்டிபஜார் என கூட்டம்

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

8 comments

  • இனி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டியது தான் விரைவில்! :-) :thnkx: தோழி!
  • :D ethanai obstacles!! Pondicherry la matamal irukatum :yes: interesting update ma'am 👏👏👏👏👏👏 ippo flow fast agidichi :dance: aduthu enaagumnu parka waiting!!<br />Ivanga evalo sadhichalum ivanga parents support panuvangalanu theriyala....ivanga caste vachi illa reject panuranga steam <br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.