காம்ப்ளக்ஸை விற்பது குறித்தும் அதற்கு மாற்றாக வேறொரு காம்ப்ளக்ஸ் வாங்கப் போவது பற்றியும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பேங்க் லோன் வாங்கப் போகும் விஷயத்தையும் அதை சாங்ஷன் செய்ய தேவநாதன் என்னும் அந்த ரீஜனல் மேனேஜர் கேட்டதையும் அவர் சொல்ல
முகம் மாறினாள் கல்பனா.
“சார்...நான் ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து பிழைப்பவள்தான்!...அதை வைத்து நான் எதற்கும் தயாரானவள் என்று நீங்க நினைத்தால்...ஸாரி....என்னால இங்க தொடர்ந்து வேலை செய்ய முடியாது!” சொல்லியவாறே அவள் “விருட்”டென்று எழ
“கல்பனா...ப்ளீஸ்...என்னோட எதிர்காலமே உன் கைலதாம் இருக்கு!...கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணும்மா!”
அவர் அப்படிக் கேட்டதும் விழிகள் இரண்டையும் விரியத் திறந்தவள்
“உன் வீட்டுல உன்னோட பொண்டாட்டி இருக்காளே...அவ என்னை விட இன்னும் அழகாவே இருக்கா...அவகிட்டப் போய் இதைக் கேளு!...நல்லாக் குடுப்பா!”
புயல் வேகத்தில் வெளியேறினாள்.
தொடரும்...
Next episode will be published on 1st June. This series is updated weekly on Tuesdays.