Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 19 - 38 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Naan avan illai
Pin It

தொடர்கதை - நான் அவன் இல்லை! – 03 - பத்மினி செல்வராஜ்

வாவ்...செம ஹேண்ட்சமா இருக்கடி...ஸாரி...ஸாரி...இருக்கடா மகிழ்.  உன்னை இப்படி பார்க்க,  எனக்கே என்னவோ பண்ணுது. உன்னை சைட் அடிக்க வேண்டும் போல இருக்கு...”  என்று கண்சிமிட்டி குறும்பாக சிரித்தாள் மங்கை...

அந்த ஆளுயர கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு தன்னுடைய மேக்கப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ்.

நேற்று இன்டர்வியூ ன் பொழுது அணிந்து இருந்ததைப் போலவே, இன்றும் பார்மல் பேண்ட், முழுக்கை ரேமன் ஷர்ட்ம் அணிந்திருந்தாள். அதனுள்ளே தன்னை கொஞ்சம் குண்டாக காட்டிக் கொள்ள எத்தனை டி-ஷர்ட் அணிந்தாள் என்று அவளுக்கே வெளிச்சம்.  

தன் உடலை சுலபமாக ஆடையால் மறைத்தவளுக்கு தலையில் இருந்த கூந்தலை மறைப்பது தான் கஷ்டமாக இருந்தது.  கருநாகம் போன்று இடைக்கு கீழே தொங்கும் அளவுக்கு நீண்ட கூந்தல் இல்லை என்றாலும் முதுகில் பாதி வரை தொங்கும் அடர்த்தியான கூந்தல் தான்.  

இந்த நடிப்புக்காக ஏனோ அதை வெட்டுவதற்கு மனமில்லை. அதனால் தன் கூந்தலை மடித்து கட்டியவள், அதன்மீது ஒரு விக் ஐ வைத்து பொருத்திக் கொண்டாள் சென்ற முறை.

இந்த முறையும் அதே போல அதே விக்கை வைத்து,  தன் தலை முடியை மறைத்து கொண்டாள். முகத்தில் பென்சிலால் வரைந்ததை போல சிறிய ஒட்டு மீசை...

கையில் ஆண்கள் அணியும் வாட்ச். மற்றொரு கையில் அவள் வழக்கமாக அணியும், அவள் தந்தை பரிசளித்திருந்த அந்த ஒற்றை காப்பை மறக்காமல் கழட்டி இருந்தாள்.

அதை கழற்றும் பொழுது மனம் கனத்து போனது. அது அவளின் இருபதாவது பிறந்த நாளுக்காய் அவளுடைய தந்தை பரிசளித்தது. அதைத் தொடர்ந்து அவளின் இருபதாம் பிறந்த நாளும் கண் முன்னே வந்தது.

ன்று எவ்வளவு கோலாகலமாய்,  அவள் குடும்பமே மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருந்தனர். அவள் அன்னை, அவளுக்கு பிடித்த சாப்பாட்டு ஐட்டங்களாக இருபது ஐட்டங்களை செய்து அசத்தினார்.

அவள் தமையனோ அவள் நீண்ட நாட்களாய் கேட்டு கொண்டிருந்த பக் வகை நாய்க்குட்டியை பரிசளித்திருந்தான்... அதை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோஷம்.. துள்ளி குதித்து எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்ட ஈரம் இன்றும் தித்தித்தது.

அனைத்துக்கும் முத்தாரமாய் அன்று மாலை அவள் தந்தை பெரிய கேக் ஐ வரவழைத்து, கூடவே தெருவில் இருந்த அவளின் நண்பர்களான நண்டு சிண்டுகளை எல்லாம் அழைத்து சுற்றி நிற்க வைத்து அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து பாட,

அழகாய் எரிந்து கொண்டிருந்த மெலுகுவர்த்தியை அணைத்து முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன்

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 03 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-06-03 10:21
Nice epi mam eagerly waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-06-03 22:39
Thanks Kasthuri!
Reply | Reply with quote | Quote
# BvBhuvanaVijai 2021-06-02 16:30
Diffrerent ah try pani erukinga but super mam. Apadiye poga poga romance yum thatti vidunga. Unga storyla romanceku panjame erukathey😁😁😁😁
Reply | Reply with quote | Quote
# RE: BvPadmini S 2021-06-03 22:38
:-) Thanks Bhuvana!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 03 - பத்மினி செல்வராஜ்தமிழ்ஸ்ரீ 2021-06-02 11:19
Today episode super different story paddu
Waiting for your next update☺☺☺
Good luck🍀🍀🍀 for ever
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-06-03 22:38
Thanks Tamil!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 03 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-06-02 10:27
:clap: nice & cute epi mam.very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-06-03 22:38
Thanks Madhu!
Reply | Reply with quote | Quote
# HopeSreetha 2021-06-02 09:57
Hope magil win there vikramant trust. But ravi do t make magil life miserable.. let hope she win here trust in work
Reply | Reply with quote | Quote
# RE: HopePadmini S 2021-06-03 22:38
Thanks Sreetha!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top