Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 23 - 46 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Naan avan illai
Pin It

தொடர்கதை - நான் அவன் இல்லை! – 04 - பத்மினி செல்வராஜ்

துதான் என் கேபின் மிஸ்டர் மகிழ்...” என்று கசப்புடன் அறிமுகப்படுத்தினான்  ரவி.

அவன் உள்ளுக்குள்ளே இன்னுமே ஆற்றாமை,  கோபம்,  வஞ்சம் என அனைத்தும் ஒன்றாக கலந்து சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் தன்னை முயன்று கட்டுபடுத்தி வார்த்தைகளில் எதையும் காட்டி விடாமல் முயன்று கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.  

அப்படியும் சில நேரத்தில் இந்த மாதிரி கசப்பு அவன் வார்த்தைகளில் வந்து விழுந்து விடுகிறது தான். இத்தனை நாட்களாக தனக்கென்று இருந்த கேபின் இப்பொழுது வேற ஒருவனுக்கு சொந்தமாக போகிறது என்று எண்ணும் பொழுது மனமெல்லாம் கசந்து வழிந்தது.

கேபின் மட்டுமா? அவனுடைய பவரும் கூடத்தான்...இனி  அவன் விக்ரமனின் பி.ஏ என்று பெருமை அடித்துக்கொள்ள முடியாது என்று உள்ளுக்குள் கோபம் பொங்கியது.  

ரவியின் முகத்தில் இருந்தே ஓரளவுக்கு அவன் மனதை யூகித்துக் கொண்டாள் மகிழ்…

பொதுவாகவே யாருக்கும் தனக்கு சொந்தமானதை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மனம் வராது தான். அது வேலை ஆகட்டும். இல்லை மற்ற பொருள் ஆகட்டும். அப்படி கட்டாயத்தின் பேரில் விட்டு கொடுக்கும் பொழுது மனதின் ஓரம் லேசான வலி இருக்கத்தான் செய்யும்

மகிழும் அப்படித்தான் ரவி கஷ்டப்படுகிறார் என்று எண்ணிக் கொண்டாள்.  ஆனால் அவன் உள்ளே வலியோடு,  வஞ்சமும் சேர்ந்திருப்பதை அப்பொழுது அறியவில்லை

ரவி காண்பித்த அந்த அறையை சுற்றிலும் நோட்டமிட்டாள்.  அதுவும் குறிப்பாக அட்டாச்டு பாத்ரூம் இருக்கிறதா என்று தேடிப்பார்க்க அவளின் அதிர்ஷ்டம் அந்த அறையிலேயே எல்லா வசதியும் இருந்தது.

அதைக் கண்டதும் தான் அவளுக்கு நிம்மதியானது.

“அப்பாடா...தப்பிச்சேன்...இல்லைனா திரும்பவும் கஷ்டமாகி இருக்கும். பொதுவான ரெஸ்ட் ரூம் ஆக இருந்திருந்தால் எந்த பக்கம் போவது என்று மீண்டும் சிக்கலாகி இருக்கும். தேங்க் காட்...” என்று நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டாள்.

அடுத்ததாய் அந்த அறையை மீண்டும் சுற்றி பார்க்க, பெரிய அளவில், அந்த அறை நல்ல விசாலமாகவே இருந்தது.  

“பாருடா...நம்ம தல,  பி.ஏ வுக்கே இவ்வளவு பெரிய ரூம் ஆ கொடுத்திருக்கிறார்...சூப்பர்...” என்று உள்ளுக்குள் ஆச்சரியப்பட்டவாறு, ரவியின் பக்கம் திரும்பியவள்,  அவள் கேபினை காட்டியதற்கு நன்றி சொல்லும் விதமாய்,

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா...”  என்றாள் ரவியைப் பார்த்து புன்னகைத்தவாறு.  

அதைக் கேட்டவன் முகமோ அஷ்டகோணத்தில் சுருங்கியது...

“வாட்?  அண்ணனா?  ஹலோ நான் என்ன உன் கூட ஒட்டி பிறந்தவனா?  இந்த மாதிரி

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Pen ondru kandenPen ondru kanden
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 04 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-06-09 14:07
Nice epi mam romba interesting :clap: ah iruku waiting for next epi :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 04 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-06-10 22:17
Thanks Kasthuri!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 04 - பத்மினி செல்வராஜ்தமிழ்ஸ்ரீ 2021-06-09 13:15
Nice update☺☺☺☺story very interesting moving and waiting for your next episode👍👍👍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 04 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-06-10 22:17
Thanks Tamil!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 04 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-06-09 10:47
:clap: nice & cute epi mam.kathai interesting aaga poguthu. :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் அவன் இல்லை! – 04 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-06-10 22:16
Thanks Madhu!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
ENUN

STST

NAI

VKV

KiMo

KanKad

NSS

VTV

KKP

SNSN

UIP

PVOVN2

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top