Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 11 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Ennuyire neethano
Pin It

Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 20 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

நான் இப்படி யோசிக்கலை” – சிவக்குமார் வருத்தத்தை விழுங்க முடியாமல் பேசினான்.

“என்ன யோசிக்கலை? மேனகா முகத்துக்கு நேரா இப்படி ஒரு பழியை சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு?” – அபிலாஷ் கோபம் கொந்தளிக்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயை மூடிக் கொண்டான் சிவா.

“உனக்கு மனசாட்சியே கிடையாதுடா சிவா. ஒவ்வொரு தடவையும் அவ உனக்காக பேசுவா தெரியுமா. எந்த அளவுக்கு அவ மனசு காயப் பட்டிருந்தா அவளே கல்யாணம் வேண்டாம்னு நிறுத்தி இருப்பா?” – தீபக் அபிலாஷ் போல கத்தவில்லை. கோபத்தை அடக்க முயற்சி செய்து பேசினான்.

தீபக் சொன்னது உண்மை என்பது புரிந்ததால் சிவா தயக்கத்தை விட்டு பேசினான்.

“நான் மேனகா மேல பழியும் சொல்லலை, தப்பும் சொல்லலை,” – சிவா விளக்கம் சொல்ல முயற்சித்தான், அபிலாஷ் அவனை பேச அனுமதிக்கவில்லை.

“இதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தா எப்படி சிவா? முதல்ல நீ தப்பு செஞ்சுட்டேன்னு ஒத்துக்கோ.”

“நான் மேனகா சந்தோஷமா இருக்கனும்னு நினைச்சேன். இதுல என்ன தப்பு இருக்கு?” – சிவா.

“டேய் பைத்தியமாடா நீ? யாராவது ஒருத்தன் வந்து எதையாவது உளறினா நீ அப்படியே நம்பிடுவீயா? அதை பத்தி விசாரிக்க கிளம்பி போயிடுவீயா?” – அபிலாஷ் சிவாவின் பேச்சை ஏற்றுக்கொள்ளாமல் கோபத்துடன் மீண்டும் கத்தினான்.

“அபி சொல்றதும் சரி தான் சிவா. நாம எவ்வளவு க்ளோஸ் பிரென்ட்ஸ். எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருந்திருக்கலாமே சிவா?” – தீபக் தன் வருத்தத்தை சொன்னான்.

“இப்போ அது தான் உங்க இரண்டுப் பேருடைய பிரச்சனையா? நான் மேனகா மேல எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கேன்னு புரியாம பேசிட்டு இருக்கீங்க. என் மனசுல இருக்குறது உங்களுக்கு புரியலையா?” – சிவா மனதில் பொங்கிய தன் சோகத்தை ஒருவரும் புரிந்துக் கொள்ள மாட்டேன்கிறார்களே என்று வருந்தினான்.

“புரியலை சிவா. உன் மனசுல இருக்குறதும் புரியலை, உன் பிடிவாதமும் புரியலை. நீ சொல்றது மாதிரி மேனகாக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருந்திருந்தா அன்னைக்கு நீ பாட்டுக்கு கோவிச்சுட்டு மூட்டை எல்லாம் தூக்கிட்டு சொல்லாம கொள்ளாம அவ வீட்டுல இருந்து புறப்பட்டு போனீயே அப்போவே அவ கல்யாணத்தை நிறுத்தி இருக்க மாட்டாளா? எதுக்குடா உன்னை பத்தி நான் சொன்னதை புரிஞ்சுக்கிட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லனும்?”

“எனக்கு இதெல்லாம் அப்போ தோணலை தீபக்.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Azhagin motham neeyaaAzhagin motham neeyaa
  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 20 - Chillzee StoryAdharvJo 2021-06-09 14:56
Indha group discussion ippo thevai thana facepalm
I pity Siva :sad: avaroda manasu purinjikama ivanga rendu perum back to back pesuradhu sariye kedyadhu..... :yes: just pouring fuel to his anxiety.... :sad: Etho oru padhatula than he juust bursted out towards his Frnds adhuvum avanga appadi illainu ivarukku theriyume..idhai ellam purinjikamal ivarai ippadiye thanimaila vittu poitangale 😈😈😈 hope they come back!! Good going ma'am 👏👏👏👏👏👏👏👏 but indha Siva va parka parka pavama irukku 😔😔😔😔 ivarai idhula irundhu yaru veliya kondu varuvanganu parka really curious.... And andha rendu blacksheep yena ananunga 👊👊👊
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 20 - Chillzee Storymadhumathi9 2021-06-09 05:19
facepalm oh my god sivavinal kobathal ethanai per mana kavalai adaigiraargal. :sad: epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 20 - Chillzee Storyதமிழ்ஸ்ரீ 2021-06-08 21:15
Nice update and Today episode is sad 😞😞😞😞
Eagerly waiting for your next episode👍👍👍👍
Good luck🍀🍀🍀 with your self
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top