(Reading time: 7 - 13 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

அவன் விட்டுடுவானா?..மண மேடையிலிருந்து இறங்கி நேரா நம்ம வீட்டுக்கு வந்திடுவான்!...நான் மண்டபத்துக்கு வந்தால்தான் தாலியே கட்டுவேன்!னு அடம்பிடிப்பான்!” என்றான்.

அமைதியாய் மகன் சொல்வதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராக்கம்மா திடீரென்று கேட்டாள், “டேய்...முரளி!...எனக்கொரு சந்தேகம்!...இது சம்மந்தமா உன் கிட்ட அந்தப் பையனோட அம்மாவோ...அப்பாவோ மிரட்டினாங்களா?”

“ம்...ரெண்டு பேருமே நான் வேலை பார்க்கும் இடத்துக்கு வந்தாங்க!...ஆனா “மிரட்டலை!”...ரொம்பப் பணிவாய்த்தான் பேசினாங்க!...தங்கள் மகனோட எதிர்கால வாழ்க்கையே என்னால் கெட்டுப் போயிடுமோ?னு நெனச்சு என்கிட்ட கெஞ்சினாங்க!...எனக்கு அவங்களைப் பார்க்கவே பாவமாயிருந்திச்சு!...என்னால் ஒரு வயோதிகத் தம்பதிகளுக்கு மனக் கஷ்டம் என்கிற போது...எனக்கு வேற வழி தெரியலை!” என்றான் முரளி.

“ஓ...அவங்கதான் உன்னை “ஊரை விட்டுக் காலி பண்ணிட்டுப் போ”ன்னு சொன்னாங்களா?” ராக்கம்மாவின் குரலில் இப்போது லேசாய்க் கோபம் தெரிந்தது.

“ம்ம்ம்...ஆமாம்!...ஒரு தொகை கூடத் தந்தாங்க...“போயி ஏதாவதொரு ஊர்ல கடைகிடை வெச்சுப் பொழைச்சுக்க!”ன்னு சொல்லி!...நான் வாங்கலை!...எனக்கென்னமோ அந்தப் பணம் எங்க ரெண்டு பேரோட நட்புக்கான விலை மாதிரி தெரிஞ்சுது...அதனால வேண்டாம்!னுட்டேன்” என்றான்.

மகனை நெருங்கி வந்து, அவன் தோளைத் தொட்டு,

“உன்னை நெனச்சு ரொம்ப பெருமைப்படறேண்டா!...உன்னோட அப்பனும் தாத்தனும் பிறப்புல கீழ் சாதியாய் இருந்தாலும்...குணத்திலேயும்...பழக்க வழக்கத்திலேயும்...ரொம்ப உயர்ந்தவங்களாய்த்தான் இந்த ஊர்ல வாழ்ந்து வந்தாங்க!...நீயும் அவங்க வம்சம்ன்னு நிரூபிச்சிட்டே!...சரிப்பா...நாம புறப்படலாம்!...இதுக்கு மேலேயும் இந்த ஊர்ல இருந்தா...வீண் பிரச்சினைகள் உருவாகும்!ன்னு உன் பேச்சிலிருந்தே தெரியுது!” என்றாள் ராக்கம்மா.

“அது செரி...எங்கே போறது?ன்னு முடிவு பண்ணி வெச்சிருக்கியா?” வசந்தி கேட்டாள்.

“போன மாசம் எங்க ரைஸ் மில்லுக்கு வந்திருந்த ஒரு லாரி டிரைவர்...அவங்க டிரான்ஸ்போர்ட் ஆபீஸோட கோயமுத்தூர் பிராஞ்ச்ல ரைட்டர் வேலைக்கு ஆள் தேவையிருக்காம்!... “உடனே வந்தா உடனே சேர்ந்திடலாம்!”னு சொன்னார்!...” என்ற முரளி தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து அந்த விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டி, 

“இதோ விசிட்டிங் கார்டு கூடக் குடுத்திட்டுப் போயிருக்கார்!....அங்க போய் அவரைப் பார்த்தா வேலையும் கிடைச்சிடும்...அவர் மூலமாகவே ஒரு வீடும் பார்த்துக்கலாம்” என்றான்.

இருந்த பொருட்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கழித்து விட்டு, துணிமணிகளையும்,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.