Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 25 - 49 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pen ondru kanden
Pin It

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்

ன் முன்னே இருந்த மித்ரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் ன் காலாண்டு முடிவை ஆராய்ந்து கொண்டிருந்தான் பிரியமித்ரன்.

அவன் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டு அவன் எதிரில் நின்றிருந்தாள் சாயா. மித்ரன் அந்த பைலில் இருந்த ஒவ்வொரு பக்கமாக புரட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அவள் கண்களில் சிறு எதிர்பார்ப்பு.

அவன் முகத்தில் எதையோ ஆர்வமாக தேடிக் கொண்டிருந்தன அவள் விழிகள். ஆனால் அவனோ மிக அழுத்தமாய், துடைத்து வைத்ததைப் போன்ற வெளுத்த முகமாய், இடுங்கிய கண்களுடன் அந்த ஃபைலை புரட்டி கொண்டிருந்தான்.  

அதன் கடைசி பக்கத்தையும் பார்த்து முடித்தவன், பின் அருகிலிருந்த பேனாவை எடுத்து அதில் கையெழுத்திட்டான்.

அதைப் பார்த்ததும் சாயாவின் முகம் வாடிவிட்டது.

எதற்காகவோ எதிர்பார்த்து காத்திருந்த குழந்தை, அது கிடைக்காமல் போனால் அதன் முகம் எப்படி அஷ்ட கோணலாக மாறுமோ, அதே போல மாறிப் போனது சாயாவின் பளிச்சென்ற முகம்.

கையெழுத்திட்ட ஃபைலை அவள் முன்னே வைத்தவன்

“நெக்ஸ்ட் சாயா...”  என்றதும் அவளுக்கு இன்னும் ஏமாற்றமாய் போனது...

அதற்கு மேல் பொறுக்க முடியாதவள்,  

“பாஸ்...இந்த ரிசல்ட்டை பார்த்து உங்களுக்கு ஒன்றுமே தோன்றவில்லையா?”  என்றாள் ஆச்சர்யம் மற்றும் ஏமாற்றத்துடன்...

அவனும் அவளை நிமிர்ந்து பார்த்தவன்

“நத்திங்... அப்படி என்ன இருக்கு சாயா? “  என்றான் புரியாதவனாய்.

“பாஸ்...நம்முடைய நிறுவனத்தின் இந்த குவாட்டர் ரிசல்ட்டை பார்த்திங்களா? போன குவாட்டரை விட இந்த குவாட்டர் 20% அதிகமா இருக்கு.

அதைப் பார்த்ததும் நீங்க ஆச்சரியப்பட்டு போவீங்க என்று பார்த்தால், உங்க முகத்துல அதுக்கான சந்தோஷத்தையே காணோமே...” என்றாள் ஏமாற்றத்துடன்.

“இந்த லாபம் உன்னை போன்ற எத்தனையோ தொழிலாளர்களின் உழைப்பு சாயா. அவர்களின் உழைப்புக்கேற்ற பலன் கிடைத்திருக்கிறது. இது எதிர்பார்த்தது தானே. இதில் பெரிதாக ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? “  என்று தன் தோளை குலுக்கினான் ப்ரியமித்ரன்.  

“பாஸ்... இயர் ஆன் இயர் ரெவென்யூ ரொம்பவுமே உயர்ந்து இருக்கு. இது நம்ம நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிளஸ்...” என்று மீண்டும் ஆர்ப்பரிப்புடன் விளக்க, அவனோ அதை

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்தமிழ்ஸ்ரீ 2021-06-13 16:13
Nice update☺ waiting for FB
Good 🍀🍀🍀 waiting for your next episode👍👍👍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்srivi 2021-06-13 13:54
Hi sissie , good epi.
hope all is well at your end . Take care.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-06-13 12:02
Chaya eppo Maya mathiri thevai illamal pesi nose cut vanga arambichanga :P indha sidumunji siricha ena sirikalana enama chaya 😁 nice update ma'am 👏👏👏👏👏
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-06-13 11:53
:clap: nice epi mam.eagerly waiting 4next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-06-13 11:28
Nice epi mam :clap: sikirama twists reveal panitunga romba interesting ah iruku epo fb sola poringa
Reply | Reply with quote | Quote
# பெண் ஒன்று கண்டேன்... ! 09Mrs fayaz 2021-06-13 11:01
Over suspence kathay da interest aye koraikuthu.. FB please..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்Arunaa 2021-06-13 10:28
Indha story romba confusing a iruku..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்Sabariraj 2021-06-13 09:15
பில்டப் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பிளாஸ்பேக் மட்டும் மொக்கையாக ஏதாவது ஒரு காரணம் வச்சிடாதீங்க.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

EEKS

KiMo

EOSTM

KTKOP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top