(Reading time: 5 - 10 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

  

அசந்து விட்டாள் ராக்கம்மா.

  

உயர்சாதிப் பிறப்புக்கள் எல்லோருமே கொடுமையானவர்களாய்த்தான் இருப்பார்கள் என்றெண்ணியிருந்த ராக்கம்மா தனசேகரை வியப்போடு நோக்கினாள்.

  

“உங்க எல்லோருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நான் இப்ப சொல்றேன்...இன்னிக்கு நான் உயிரோட உங்க முன்னாடி நின்னுக்கிட்டிருகேன்னா....அது முதல் காரணம் முரளிதான்” என்ற் ஆரம்பித்து சிறு வயதில் அந்த பாழுங்கிணற்றில் நடந்த சம்பவத்தை விவரித்தான் தனசேகர்.

  

வாய் பிளந்தாள் ராக்கம்மா.   “என்னப்பா...நீ சொல்றது நெஜமா?”

  

“சத்தியமான உண்மைம்மா!...தன்னுடைய உயிரையும்...மானத்தையும் பொருட்படுத்தாமல் என்னுடைய உயிரைக் காப்பாத்தியவன் அம்மா அவன்!..இப்ப நான் வாழ்ந்திட்டிருக்கற வாழ்க்கை அவன் போட்ட பிச்சை!” உணர்ச்சிகரமாய்ச் சொன்ன தனசேகரை இழுத்தணைத்துக் கொண்டாள் ராக்கம்மா.

  

“இதுவரைக்கும் எனக்கு ஒரு மகன்தான் இருந்தான்...இப்பயிருந்து எனக்கு ரெண்டு மகன்கள்”என்றாள் அவளும் தழுதழுத்த குரலில்.

  

சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த தாயின் அணைப்பிலிருந்து விலகிய தனசேகர்,  “அம்மா...முரளி எங்கே?” கேட்டான்.

  

“இப்ப வந்திடுவான்...வழக்கமா இந்த நேரத்துக்குத்தான் அவன் சாப்பிட வருவான்” என்றாள் ராக்கம்மா.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.