(Reading time: 6 - 11 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“என்ன?..என்ன சொல்ல வர்றீங்க எல்லோரும்?... நான் அவளைக் காப்பாத்தாமலே விட்டிருக்கணும்!னு சொல்றீங்களா?” கூட்டத்தைப் பார்த்துக் கோபமாய்க் கேட்டான் சொக்கு.

  

எல்லோரும் அவனையே உற்றுப் பார்க்க,

  

முரளியின் அருகில் சென்று அவன் காதில் சொக்கு ஏதோ சொல்ல, தாடையைச் சொறிந்தபடி யோசித்த முரளி, தன் தாயை அருகில் அழைத்துப் பேசினான். அவளும் மேலே பார்த்து யோசித்து விட்டு ஏதோ பதிலைச் சொல்ல,

  

சிரித்துக் கொண்டே கூட்டத்திற்கு முன்னால் வந்த சொக்கு, “இங்க பாருங்கப்பா...இன்னிக்கு புதன் கிழமை!...வர்ற ஞாயிற்றுக்கிழமை!...நம்மூர்க் கோயில்ல...இந்த வசந்திக்கும் எனக்கும் கல்யாணம்!..அவளோட அண்ணனும்...அம்மாவும் இதே இடத்துல தங்களோட சம்மதத்தைக் குடுத்திட்டாங்க!...அதனால...எல்லோரும் மறக்காம அந்தக் கல்யாணத்துக்கு வந்து ஆசீர்வாதம் பண்ணிட்டு...கல்யாணச் சாப்பாட்டை மூக்கு பிடிக்கச் சாப்பிட்டுட்டுப் போங்க!” என்றான் சந்தோஷமாய்.

  

“ஒரு நிமிஷம்!”

  

திடீரெனக் குரல் கொடுத்தாள் வசந்தி.

  

“ஆமாம்...கல்யாணம் பண்ணிக்கப் போறவ நான்!...என் கிட்டே யாரும் ஒரு வார்த்தை கூடக் கேட்கலை!...நீங்க பாட்டுக்கு ஆளாளுக்கு முடிவு பண்ணிக்கறீங்க!”

  

எல்லோருமே அதிர்ந்து போயினர்.

  

முரளி மட்டும் உடனே சுதாரித்துக் கொண்டு, “ஓ...தப்புத்தான்...தப்புத்தான்.....உன் கிட்டேதான் மொதல்ல கேட்டிருக்கணும்!...மறந்துட்டேன்...இப்பக் கேட்கறேன்...சொல்லும்மா...இந்த சொக்குவைக் கட்டிக்க உனக்கு சம்மதமா?” சிரித்த முகத்துடன் கேட்டான்.

  

கழுத்தைத் திருப்பி, சொக்குவைப் பார்த்தவள், “இப்ப...இந்த நிமிஷம்...இதோ இந்தக்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.