அதனால் தான் வார்த்தைகளால் மனோஜை தடுத்திருந்தாலும், அவனின் அணைப்பை கைகளால் விலக்காமல் தைரியமாக அனுமதித்திருந்தாள் மஞ்சு...
இப்போது, அவனின் அணைப்பில் இருந்தபடியே கணவன் பக்கம் திரும்பியவள்... மனோஜின் முகத்தை கைகளில் ஏந்தினாள்...
தங்கை திருமண ரிசப்ஷன் என்பதற்காக கோட் சூட் அணிந்து ஸ்மார்ட் & ஹாண்ட்சம் ஆக இருந்த கணவனை பார்த்து ரசித்தாள்...
“pbs!!!! இந்தியா வந்தப்புறம் நமக்குள்ளே தனிமையே கிடைக்கலை... நான் நம்ம அபார்ட்மென்ட்டை ரொம்ப மிஸ் செய்றேன்...”
“பொறுப்பான அண்ணனா பேசாம, என்ன இது???”
“எனக்கும் சேர்த்து தான் எல்லா பொறுப்பையும் நீயே எக்ஸ்ட்ராவா செய்றீயே... எதுக்கு இப்படி ஓவர் டூ செய்றன்னு எனக்குப் புரியலை...”
“நம்ம கல்யானம நடந்தப்போ அத்தைக்கு முழு சந்தோஷம் இல்லைன்னு தெரியும்... அதும் முக்கியமா ஜோதி கல்யாணம் பத்தின கவலையில தான் அப்போ கோபப் பட்டாங்க... இப்போ நாம எல்லோருமா அவ கல்யாணத்தை அவங்க ஆசைப் பட்டதை விட அருமையா நடத்துறோம்னு அவங்களுக்கு சந்தோஷம் வரணும்னு தான் செய்றேன்...”
மனோஜ் பெருமையுடன் மனைவியின் நெற்றியை தன் நெற்றியால் இடித்தான்...
“அப்படி எல்லாம் நீ ப்ரூவ் செய்யனும்னு அவசியமே இல்லை pbs...!!! நான் உன்னை விரும்ப தொடங்கினப்போ, என் ஃபேமிலி பத்தி எல்லாம் யோசித்தேன்... நீ இந்த அளவுக்கு என் குடும்பத்துல ஒருத்தியா மாறுவேன்னு நான் நினைக்கவே இல்லை...”
“நானும் கூட தான் நினைக்கலை... இதுக்கு எல்லாம் நீங்க தான் காரணம்... உங்க மேல